இராமாயணம்

இராமாயணம் பலன் [சுருக்கம்] 


Image result for ramayanam

          ஓம்  ஸ்ரீ  இராம  ராம  இராமேதி  ரமே  இராமே  மனோரமே  ஸகஸ்ரநாம  தத்துல்யம்  ஸ்ரீ இராம  நாம  வராணனே !

இந்த  மந்திரத்தை  தினம் தினம் சொல்லிக்  கொண்டிருந்தாலே  இராமாயணம்  முழுவதும்  படித்ததற்கு  நிகராக  கொள்ளலாம்.


இராமர் வடிவம் [ கம்பர் இராமாயணத்தில்]:


இராமரும் -- கம்பரும்:

Related image

தோள்  கண்டார்  தோளே  கண்டார்  

தொடு கழல்  கமலம்  அன்னத் 

தாள்  கண்டார்  தாளே   கண்டார்  

தடக்கைக்  கண்டாரும்   அஃதே 

வாள்   கொண்ட  கண்ணார் 

யாரே  வடிவினை  முடியக்  கண்டார் 

ஊழ்  கொண்ட  சமயத்தன்னார் 

உருவு  கண்டாரை  ஒத்தர் 

எனக்  கூறும்  கம்பனின்  வரிகள்  தமிழ்க் கற்றோர்க்கு  அமுதம்.

Related image

மேலும்  இராமாயணம்  என்னும்  மகா  இதிகாசத்தில்  கம்பர்,

தனது  பட்டந்தனை தம்பியர்க்கு 

ஈயெனத்  தந்து  மகிழும் 

தமையனும்,

தமையனார்  வருமளவு  மாவிரதமாகவே 

தபஸ்  புரியும்  தம்பியும்,

கனதனப்   பாலீய்ந்த   தாய்தனைப் 

போல  கருணை  செய்திடும் 

மதனியும்,

காணுமுன்  தந்தைபோல்  திருவடிகள் 

பணியும்  கனிட்டவனுடைய 

மனையாட்டியும்,

தினம்  தினம்  பரிவாகி  அம்மையே 

என்று  பேர்  செப்பும்  கொழுந்தனாரும் 

சேர்ந்து  வாழ்கின்ற  பேர்  " திரேதாயுகந் " தன்னில்  தசரத  குமாரர்  கண்டாய்....

எனும்  கம்பரின்  வரிகளில்  இராமாயணத்தை  நம்  கண்  முன்னே  காட்டுகிறார்.


Image result for ramar
                  கம்பரின்  எழுத்து  வன்மையில்  கம்பனுக்கு  நிகர்  கம்பரே என  வியக்க  வைக்கிறது.


                  கம்ப  இராமாயணம்  தமிழில்  கம்பரால்  நமக்குக்  கிடைக்கப்  பெற்றது  மா -- தவம்.  

" கம்பருக்கு  நிகர்  கம்பனே ;

   கம்பன்  வீட்டுக்  கட்டுத்  தறியும்  கவி  பாடும் "

Related image
  
                நம்மைப்  போல் எளியவர்களுக்கும்  புரியவைக்கும்  வகையில்  அவர்  தொகுத்திருப்பது.


                  தமிழுக்கு  தமிழகத்தில்  தமிழ்  மொழியின்  பெருமையில்  கம்பரும்  ஒரு  சாட்சி  என்றால்  அது  மிகையாகாது. 
          

    

அடுத்து::முடியாத  காரியங்களை  தடையின்றி  முடிக்க






   

   

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்