பேச்சும் - செயலும்

சிந்தனைக்கு:

Image result for silent person images

இந்த [சமுதாயத்தில்] உலகம், 

அதிகம் பேசுபவரை - வேடிக்கை பார்க்கிறது 

அளந்து பேசுபவரை - வியந்து பார்க்கிறது 

மௌனமாக இருப்போரை - அளப்பரிய ஆச்சரியத்தோடு பார்க்கிறது 

பொறுமையாக இருப்போரை - உற்றுப் பார்க்கிறது 

நிதானமாக சிந்தித்து செயல்படுவோரை - தலை நிமிர்ந்து உயரே பார்க்கிறது 

இதில் நாம் யாராக இருக்க வேண்டும்?

Image result for past present future

நேற்று  -  கடந்த காலம் 

நாளை -  எதிர் காலம் 

இன்று  -  நிகழ் காலம் 

இன்று மட்டுமே நிஜம். நாம் நிஜத்தில் வாழ வேண்டும்.

கடந்த காலங்களின் அனுபவங்கள் நம் 'நிழலோடு' இருக்கட்டும்.

அது வாழ்க்கை நமக்கு தந்த அனுபவ பாடங்களாக ஏற்றுக் கொள்வோம்.

எதிர் காலம் - எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி கவலை, அச்சம் கொள்ளாமல் பயணிப்போம்.

''நேற்றைய'' அனுபவங்களை சுமந்துக் கொண்டு ''இன்று'' என்கிற நிஜத்தில் மிகக் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து செல்வோம் என்றால் ''நாளை'' என்ற எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.

பேசுவது - மனிதர்களுக்கு உரிய உயர்ந்த சிறப்புகளுள் ஒன்று.

'' குறிப்பறிந்து பேசுக
   சிந்தித்து பேசுக 
    சிறப்பாக பேசுக 
   காலமறிந்து பேசுக ''

 சொல்வதும் , செயல்படுவதும் ஒன்றாக இருக்கட்டும்.

நிறைய கற்கிறோம் அனால் கற்றப்படி நடக்கிறோமா ? 
    
     எனில் இல்லை என்ற பதிலே பதிலாக வரும்.

அதிகம் சத்தமிடும் சலங்கை காலிலும் மௌனமாக உள்ள அணிகலன் தலையிலும், உடம்பிலும் அலங்கரிக்கிறது என அறிவோம்.

உடல் '' பவித்ரம் " தான். ஆனால் இதயம் உள்ள பகுதி உன்னதமாக போற்ற படுகிறது.

நாம் 
" பேசும் பேச்சும்" 

" சொல்கின்ற பேச்சும் "

" செய்கின்ற செயலும்"

நமது அடையாளம். 

நம் அடையாளத்தை இழக்கலாமா?    


அடுத்து::வராகி அம்மன் 

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்