போகர் [ சித்தர்]

போகரை பற்றி இனி சிறிது காண்போம்.

Image result for pogar chithar

               அருள்மிகு பழனி  தண்டாயுதசாமி அருள் திருமேனியை நவபாஷாணக் கட்டினால் நிறுவியவர். 
               இவரின் வரலாறு நாம் அறிவது அவசியம் என்றுணர்ந்து அவரைப் பற்றி சிறு தொகுப்பினை இங்கு பகிர்கிறேன்.

pulippani siddhar

பிறப்பு:

           " திருநந்தி தேவரே '' பலவகைப் பிறப்புக்களை அடைந்து பின்பு 'போகராக' பூமியில் தோன்றியதாக வரலாறு.

காலம்:

           ஐந்தாயிரம் [ 5000 ] ஆண்டுகட்கு முன்னதாக இருக்கலாம் என அறியப் படுகிறது.

நூல்கள்:

           மருத்துவ , ஜால நூல்கள் போகரால் போகர் ஏழாயிரம், போகர் எழுநூறு என எழுதப்பட்டவை.

" புலிப்பாணிச் சித்தர்" இவருடைய சீடராவார்.

Image result for pogar chithar      
''வான வழியில் சீனம், உரோமாபுரி, மெக்கா, மதினா ஆகிய இடங்களுக்கு சென்றவர்''.

Related image

       போகர் '' மருத்துவம், இரசவாதம், காயகற்பம், கணிதம் '' போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்கியவர்.

        போகர் இறுதிக் காலத்தில் பழனித் தலத்தில் தங்கிவிட்ட இவர் பழனி மலையின் மேல் தாம் அமைத்த திருக்கோவிலின் கண், நவபாஷாணக் கட்டினால் பழனி அருள்மிகு பழனி  தண்டாயுதசாமி அருள் திருமேனியை நிறுவினார். பழனி ஆண்டவர் வலக் கரத்தில் உள்ள தண்டம் ஞானத்தின் சின்னமாகக் கருதப் படுகிறது. 

         பழனி ஆண்டவரின் திருமேனியில் பட்டு வரும் விபூதி, சந்தனம், தேன் முதலிய பொருட்கள் அனைத்தும் மக்களின் உடற்பிணி, உளப்பிணி, பிறவிப்பிணி தீர்க்கும் அரு மருந்தாய் விளங்குகின்றன.

போகர் சந்நிதி:

        மலைக் கோயிலின் உட்பிரகாரத் தென்மேற்கு மூலையில் போகர் சந்நிதி உள்ளது. இதுவே போகர் ஜீவ சமாதி அடைந்த இடம்.        

Image result for pogar chithar samadhi



             போகர் வழிப்பட்ட அருள்மிகு புவனேசுவரி அம்மை, மரகதலிங்கம் இவை இன்னும் பூசையில் உள்ளன.

                              Image result for life of bogar siddhar



                இவரின் சந்நிதியிலிருந்து அருள்மிகு தண்டாயுதபாணி ஸ்வாமி திருவடிக்கு செல்ல ஒரு சுரங்க வழி உள்ளது.

Related image

             கடைசியாக இதனுட் சென்ற அவர் திரும்பாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார் என அறியப்படுகிறது.

             மக்களின் நலனுக்காகவே முயன்று அரிதினும் பாடுபட்டு நவபாஷாணக் கட்டினால் பழனி அருள்மிகு பழனி  தண்டாயுதசாமி அருள் திருமேனியை நிறுவிய ''போகரின்'' அருள் திறத்தைப் போற்றி துதிப்போம்.

சித்தன் வாக்கு -- சிவன் வாக்கு

             சித்தர்கள் தந்நலம் கருதாமல் வாழ்பவர்கள். 
             

             சித்தர்கள் ஆலயம் செல்லும் போது அங்கு மௌனமாக அமர்ந்து தியானித்தால் மனம் அமைதி பெற்று வேண்டிய வரங்கள் எளிதில் பெறலாம்.




 அடுத்து::கர்ம  வினை பலன் நீங்க

Comments

Post a Comment

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்