சிந்திக்க

ஒரு சிறு உரையாடல் :

   Image result for a family pic of worker in ancient india

               ஒரு செல்வந்தன் தொழிலாளியிடம் நீ எப்போதும் எப்படி உற்சாகத்துடன் உழைக்கிறாய் என்ன தான் உழைத்தாலும் உன் குடும்பத்திற்கு இது போதுமானதாக உள்ளதா ? 
              உன் வீட்டில் இருப்பவர்களோ ஐந்து பேர் என்கிறாய் இந்த வருமானம் எதிர்காலத்திற்கு போதுமா எனக் கேட்க, 

அந்த தொழிலாளி ஐயா, 

            இந்த பணத்தைக் கொண்டு தினமும் கஞ்சி செய்து என்னைப் பெற்ற என் தாய்,  தந்தைக்கு ஒரு பங்கும் என் உடன் பிறந்த சகோதரி கணவன் வீட்டை துறந்து என்னை தஞ்சம் அடைந்ததால் அவளுக்கு ஒரு பங்கும், என்னை நம்பி வந்த என் மனைவி எனது சொத்து ஆதலால் அவளுக்கு ஒரு பங்கும்,  என் எதிர்காலம் ஆகிய என் மகன் அவனுக்கு ஒரு பங்கும் போடுகிறேன்.

                 என் கடமைகளை நான் மிக சரியாக செய்வதாக எண்ணி மகிழ்வோடு உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

                வேறு எதை பற்றியும் நான் சிந்திப்பதில்லை என்று கூறினான்.


தாய் தந்தைக்கு செய்வது -- புண்ணியத்தில் சேர்கிறது   

சகோதரிக்கு செய்வது -- தர்மத்தில் சேர்கிறது 

மனைவிக்கு செய்வது -- அவள் கணவனின் சொத்து , பாதுகாக்க பட வேண்டியவள் 

பிள்ளைகளுக்கு செய்வது -- எதிர் கால சேமிப்பு 

கடமை , நியதி, புண்ணியம், தர்மம் இந்த நான்கும் பின்பற்றுபவர்களுக்கு அச்சம் தேவை இல்லை என்பதை உணரலாம். 

அடுத்து::விதி--மதி 

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்