முடியாத காரியங்களை தடையின்றி முடிக்க
முடியாத காரியங்களை தடையின்றி முடிக்க :
இது படித்ததில் கிடைத்த தகவல். எளிமையானது பயன் பெறுங்கள்.
இது படித்ததில் கிடைத்த தகவல். எளிமையானது பயன் பெறுங்கள்.
தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 1.00 -- 1.15 தொடங்கி 2.00 மணிக்குள் செவ்வாய் ஓரையில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து ஒன்பது மண் அகலில் சிகப்பு திரி கொண்டு விளக்கேற்றி, ஒவ்வொரு விளக்கிலும் ஒரு மிளகு இட்டு நெய் தீபம் ஏற்றி உருளைக்கிழங்கு வேக வைத்து நிவேதனமும், பால் பாயசமும் செய்து தூப தீப ஆராதனைகள் காட்டி தேங்காய் உடைத்து வழிபட்டு வாருங்கள்.
விரதம் இருப்பவர்கள் சிவப்பு நிறத்தில் உடைகள் அணிவது சிறப்பு.
உண்ணா நோன்பு இருந்து விரதம் முடிக்க வேண்டும்.
ஒன்பது வாரம் முடிந்த பிறகு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெற்றிலை மாலை போட்டு உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.
முடிந்தவர்கள் ஒன்பது பேருக்கு நெய்யுடன் மிளகும் உப்பும் சேர்த்து அதனுடன் சாதத்தைக் கலந்து உருளைக் கிழங்கு பொரியல் வைத்து தானம் செய்யுங்கள்.
கடினமான விஷயங்கள் எளிதில் நிறைவடைவதை உணரலாம். பலரும் பயனடைந்ததை நீங்களும் உணர்ந்து நன்றி செலுத்தலாம் அஞ்சனை மைந்தனுக்கு.
Comments
Post a Comment