திருமணம் இனிதே நடைபெற

திருமணம் இனிதே நடைபெற :


          Image result for kalasam

             வெள்ளிக் கிழமை இராகு காலத்தில் பூஜையைச் செய்தல் வேண்டும்.  அன்று தலைக்கு  குளித்து  தூய  ஆடை  உடுத்தி  பூஜை  அறையையும், வீட்டையும்  தூய்மைப்  படுத்த வேண்டும்.  விளக்குகள்  ஏற்றி  வைத்து  அழகு  படுத்த  வேண்டும்.  

Image result for kalasam with coconut and two kuthuvilakku beside it

பூஜைக்கு  ஒரு  தாம்பாளத்தில்  அரிசி  வைத்து  அதன்  மேல்  கலசம்  வைக்க  வேண்டும்.  கலச  சொம்பில்  தண்ணீர்  ஊற்றி  சிறிது  மஞ்சளிட்டு  அதில்  நாணயம்  இடலாம்.  மாவிலை  [9]  எண்ணிக்கையில்  வைத்து  அதன்  மேல்  கலச  தேங்காய்  வைக்கவும்.  நாரோடு  கூடிய  தேங்காய்  அதற்கு  மஞ்சள்  பூசி  குங்குமம்  வைத்து  பூக்களால்  அலங்கரித்து  இரு  பக்கமும்  குத்துவிளக்கு  ஏற்றி  விடவும்.  பின்  தளிகை  [வெல்லம்  அரிசியால் ]  செய்து வாழை இலையில்  வைத்து  பூஜையை  சரியாக  10.40 am  க்கு  இராகு காலத்தில்  தொடங்கவும். 

             

தூப  தீபங்கள்  காட்டி  தேங்காய்  உடைத்து  இருபக்கமும்  வைத்து  பிரார்த்திக்க வேண்டும்.

Image result for goddess durga in kalasam

               கலசத்தை  துர்கையாக  நினைத்து  துர்கை  அம்மனுக்கு  ஸ்தோத்திரம்  சொல்லி  பாடல்கள்  பாடி  திருமணம்  விரைவில் நடக்க  வேண்டும்  என்று  பிரார்த்திக்க வேண்டும்.

Related image

              12 மணிக்குள் முடித்து விடவும். பின்  காக்கைக்கு  வைத்து  விட்டு  விரதம்  இருப்பவர்கள்  சாப்பிட  வேண்டும்.  

Image result for offering food to crow

              தொடர்ந்து  9 வாரம்  செய்ய  வேண்டும்.  ஒவ்வொரு  வாரமும்  அந்த  கலசத்தை  மறுபடி  இதே போல்  செய்ய  வேண்டும். 

               பூஜை செய்த  கலச  தேங்காயை  எடுத்து  கொண்டு  அடுத்த  வாரம்   பூஜைக்கு  வேறு  தேங்காயை  கலச  சொம்பிற்கு  வைக்கவும்.  தாம்பாளத்தில் உள்ள  அரிசியை  தளிகை  செய்யவும்.  

            9 வாரம் செய்து முடிக்க  துர்கையின் அருள் பரிபூரணமாக  உங்களுக்கு  கிடைக்கும்.  குழந்தை  வரம்  வேண்டியும்  இதை  செய்யலாம்.  

             9 வாரம்  முடிவதற்குள்ளாகவே சுப செய்திகள்  வரும்.

Related image

             வேண்டுதல்  இருப்பவர்கள்  விரதம்  நோன்பு  இருக்க  வேண்டும்.  அசைவம்  வீட்டில்  சமைக்க கூடாது.  ஒரு வாரம்  தடைபட்டால்  அடுத்த  வாரம்  செய்யலாம். தவறில்லை.

            கலச  தேங்காயை  மட்டுமே  பூஜைக்கு  ஆவாஹனம்  செய்தல்  வேண்டும். மனநிறைவோடு  தொடங்கி  ஆனந்தமாக  வழிபடவும். 


            ஒன்பது  வாரங்களும்  துர்கை  நம்  வீட்டில்  வாசம்  செய்வதாக  ஐதீகம்.

Image result for goddess durga

" ஓம்  காத்யாயனே  வித்மஹே  கன்யகுமாரி   தீமஹி  தந்நோ  துர்கி  ப்ரசோதயாத்"    


 எனும்  துர்கையின்  காயத்ரி  மந்திரத்தை  ஜெபிக்கவும்.


ரக்ஷ ரக்ஷ ஜெகன்  மாதா  சர்வ  சக்தி  ஜெய  துர்கா  தேவியை  அடைக்கலம்  அடைந்திட்டால்  எல்லா  நன்மைகளும்  சேரும்.


Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்