விதி -- மதி

          " விதியை மதியால் வெல்லலாம் " என்று விதியில் இருந்தால் மட்டுமே மதியால் வெல்ல முடியும். 


            விதி வலியது என்பார்கள். மாற்றங்கள் வரும் என்று விதியில் இருந்தால் மட்டுமே மதியும் அதன் வழியே போகும். 

            வாழ்க்கையை அதன் போக்கிலே விட்டுவிட்டு நாம் பயணிக்க வேண்டும்.

             பயணம் மேற்கொள்ளும் போது நிறைய சுமைகளை எடுத்துச் செல்ல நேரும் போது நாம் அந்த சுமைகளை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு நிம்மதியாகப் பயணம் செய்யலாம் .

                அப்படி இல்லாமல் அந்த சுமைகளை நம்முடனே வைத்துக் கொண்டு பயணம் செய்தால் பயணமும் இனிக்காது நாமும் களைப்படைவோம்.

                நம் சுமைகளை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு பயணம் மேற்கொள்வோம். [வாழ்க்கை எனும் பயணம்]

                இறைவனின் மேற்பார்வையில் நம் சுமைகள் தானாகவே சேரும் இடம் வந்தவுடன் பத்திரமாக சேர்ந்துவிடும். நாம் ஏன் கவலைகளை சுமந்துக் கொண்டு வாழ வேண்டும். இறக்கி விட்டு கடமையை செய்வோமே மற்றது விதி வழி.
Image result for mahabharat
                நம் வாழ்க்கையை நாமே தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தால் நம் கையில் எதுவும் இல்லை என உணர்ந்து கொள்ளலாம்.

                நாம் தான் செய்தோம் என் நினைத்தால் அது சிறு பிள்ளைத்தனம் . விதி வழி பாதை போகும். மதியும் -- விதி வழியே பயணிக்கும். ஆதலால் ரொம்பவும் அலட்டாமல் நிதானித்து இரசித்து கிடைத்த வாழ்க்கையை தொலைத்து விடாமல் வாழுங்கள். பலனை எதிர்பாராமல் கடமையை செய்வோம்.

சிந்தனைச் சக்தி-- ஆற்றல் மிக்கது.

மனித உயிர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு.

சிந்திப்போம்--செயல் படுவோம்

Comments

Post a Comment

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்