பாவம் -- புண்ணியம்
பாவம்
நாம் நம்மை அறியாமலே பாவமும், புண்ணியமும் செய்து கொண்டே இருப்போம். நில்லாப் பிழையும் , நினையாப் பிழையும் கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும், எல்லாப் பிழையும் நம்மை அறியாமல் நிகழும்.
புண்ணியம்
நாம் அறியாமல் நிகழாது. நாம் புண்ணியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வரவேண்டும். சொல்லால், மனத்தால், எண்ணத்தால், நினைவுகளால், செயலால்...
பாவத்தின் பலன்
அது செய்வோரை மட்டுமே அழிக்கும். வேறு யாரிடமும் செல்லாது. எத்தனை, எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அது செய்தவரை மட்டுமே பல மடங்காக பெருகி சென்றடையும்.
பாவக்கணக்கு பெருகி கொண்டே போனால் பிறவிகள் தோறும் அல்லல்பட்டு வீழ்வோம் என்பதனால் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும், அறியாமலும் கூட சிறு பாவமும் செய்யாமல் இருக்க முயற்சிப்போம்.
புண்ணிய கணக்கு:
நாம் செய்யும் சிறு புண்ணியமும் பல் மடங்காக பெருகி நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும், நம் தலைமுறையினருக்கும் சென்றடையும்.
எத்தனை பிறவி எடுத்தாலும் அது பன் மடங்காக நம்மை வந்து சேரும்.
காலதேவன்
நாம் பிறக்கும் போதே நம்முடனே ஒரு சக்தி ஸ்வரூபமாக தோன்றுகிறது.
அது நாம் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டுக் கொள்ளும். சிறு அணுவும் தவறாது.
"கால தேவன் " கவனித்துக் கொண்டே இருப்பான் என்பதை நாம் கனவிலும் மறக்கலாகாது. அவரின் கால சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.
" முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"
" வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்"
"நன்றும், தீதும் பிறர் தர வாரா "
என்றெல்லாம் மக்களாகிய நாம் சொல்வது இவ்வாறாக தான்.
காலத்தின் தீர்ப்பு:
முற்பிறப்பில் செய்த நல்வினையும், தீவினையும் இப்பிறப்பிலும் தொடருமென்பதை அறிக, கவனத்தில் கொள்க.
அடுத்து::தேவி இந்திராக்ஷீ
Comments
Post a Comment