அனுமன் படலம்
சுந்தர காண்டம் பற்றி சிறு துளிகள் :
வால்மீகி மகரிஷி இராமாயணம் என்னும் மகா காவியத்தை உருவாக்கி கொண்டிருக்கும் போது அனுமன் படலம் வந்தது . அவர் அனுமனை பற்றியே தனியாக ஒரு காண்டம் எழுத வேண்டும். அவரின் பெருமைக்கு சான்று சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் அனுமனை எண்ணி புளங்காகிதம் அடைந்தார். இந்த இராம காவியத்தில் அவருக்காகவே ஒரு பாகம் வடிவமைக்கப்பட வேண்டும் என மனதில் எண்ணி கொண்டாராம். என்ன பெயர் சூட்டலாம் என யோசனையில் இருந்த போது அனுமனது தாய் அஞ்சனையைக் காண நேரிட்டது. இவர் போனதும் அஞ்சனை சுந்தரர் வரவில்லையா என்றிருக்கிறார். வால்மீகி மகரிஷிக்கு அனுமனுக்கு சுந்தரர் எனப் பெயர் இருப்பது தெரிய வந்து சுந்தரர் என தலைப்பிட்டு காவியம் எழுத தொடங்கிவிட்டாராம். வால்மீகி அனுமாரிடம் இந்த காப்பியத்திற்கு உனது பெயரை சூட்டியிருக்கிறேன் என்று கூற அனுமன் ஆச்சரியத்துடன் வெட்கப்பட்டு கொண்டாராம். வால்மீகி சுந்தர காண்டம் என்று சொன்னவுடன் நம்மை நம் அன்னை அப்படித் தானே அழைப்பாள் என்று எண்ணி வால்மீகி மகரிஷியை பார்க்க அவரும் ஆமோதிப்பது போல் புன்னகைப்பதாக இச் சிறு சம்பவம் எடுத்துரைக்கிறது. அனுமனும் தனக்களித்த கௌரவத்தை தலைக்குனிந்து ஏற்றுக் கொண்டாராம்.
சுந்தரர் என்றால் அழகு. அஞ்சனை தன் மகனை அப்படி தான் அழைப்பாராம். இந்த பெயர் சொல்லி அவர் அன்னை அழைக்கும் போது மகிழ்ச்சியுடன் நாணமும் கொள்வாராம்.
அனுமன் மிகுந்த பலசாலி, அறிவாளி, வீரம், விவேகம் பொருந்தியவர்.
ஶ்ரீ இராமரை தன் இதயத்தில் வைத்து பூஜிப்பவர்.
சீதை அனுமனை மகனே என்று அழைத்தாராம்.
இவ்வளவு சிறப்புகள் இருந்தும் மிகுந்த அடக்கமாய் இருந்து ஶ்ரீ இராமரையே வியப்பில் ஆழ்த்தியவர்.
அடுத்து: ஶ்ரீ சீதா சமேத இராம பாத சேவகன்
அடுத்து: ஶ்ரீ சீதா சமேத இராம பாத சேவகன்
Good Story Ma :)
ReplyDelete