Posts

Showing posts from July, 2018

இராமாயணம்

Image
இராமாயணம் பலன் [சுருக்கம்]            ஓம்  ஸ்ரீ  இராம  ராம  இராமேதி  ரமே  இராமே  மனோரமே  ஸகஸ்ரநாம  தத்துல்யம்  ஸ்ரீ இராம  நாம  வராணனே ! இந்த  மந்திரத்தை  தினம் தினம் சொல்லிக்  கொண்டிருந்தாலே  இராமாயணம்  முழுவதும்  படித்ததற்கு  நிகராக  கொள்ளலாம். இராமர் வடிவம் [ கம்பர் இராமாயணத்தில்]: இராமரும் -- கம்பரும்: தோள்  கண்டார்  தோளே  கண்டார்   தொடு கழல்  கமலம்  அன்னத்  தாள்  கண்டார்  தாளே   கண்டார்   தடக்கைக்  கண்டாரும்   அஃதே  வாள்   கொண்ட  கண்ணார்  யாரே  வடிவினை  முடியக்  கண்டார்  ஊழ்  கொண்ட  சமயத்தன்னார்  உருவு  கண்டாரை  ஒத்தர்  எனக்  கூறும்  கம்பனின்  வரிகள்  தமிழ்க் கற்றோர்க்கு  அமுதம். மேலும்  இராமாயணம்  என்னும்  மகா  இதிகாசத்தில்  கம்பர், தனது  பட்டந்தனை தம்பியர்க்கு  ஈயெனத்  தந்து  மகிழும்  தமையனும், தமையனார்  வருமளவு  மாவிரதமாகவே  தபஸ்  புரியும்  தம்பியும், கனதனப்   பாலீய்ந்த   தாய்தனைப்  போல  கருணை  செய்திடும்  மதனியும், காணுமுன்  தந்தைபோல்  திருவடிகள்  பணியும்  கனிட்டவனுடைய  மனையாட்டியும், தினம்  தினம்  பரிவாகி  அம்மைய

பகவத் கீதை

Image
பகவத் கீதை சாராம்சம்: கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. என்பதே..        எதை  இழந்தாலும் இழந்ததை நினைத்து வருத்தப்படாதே  அது  நியாயமாக  உனக்குச்  சேரவேண்டியதென்றால்  அது  இன்னொரு  வடிவில்  உன்னை  வந்து  சேரும். பகவத் கீதை சுருக்கம்:            கீதா,  கீதா  (Geedha ,  G eedha ) என்று பத்து  முறை தொடர்ச்சியாக  மெய்மறந்து  சொல்லிக்  கொண்டே இருங்கள்.            அது  தியாகி, தியாகி  என்றே  ஒலிப்பதை  உணர்வீர்கள். தியாகத்தின்  வடிவம்  ஸ்ரீ கிருஷ்ணர்.   கீதா என்ற சொல்லின் எழுத்துக்களை  மாற்றி  உச்சரித்தாலும்  தாகீ ( தியாகி ).              பகவத் கீதையைப்  பாராயணம்  செய்வதற்கு  நிகராகக்  கருதப்படுகிறது.                யோக  மாயையால்  நன்கு  மறைக்கப்பட்டு  உள்ள  இறைவனை  ஞானிகளால்  மட்டுமே  உணர  முடியும்.    அடுத்து::இராமாயணம்  

தேவி இந்திராக்ஷி

Image
          இந்திராக்ஷீம் துதியை தினமும் பாராயணம் செய்து வர  நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும், காய்ச்சல் குணமாகும். மந்திரங்கள்: இந்திராக்ஷீம் யுவதீம் தேவீம்  நானாலங்கார  பூஷிதாம்  ப்ரசன்னவதனாம்  போஜாமப்ஸ ரோகண  ஸேவிதாம்த்  விபூஜாம்  சௌம்யவதனாம்  பாஸாங்குஸதராம் பராம்த்ரைலோக்ய  மோஹினீம்   தேவிமிந்திராக்ஷீ  நாம கீர்திதாம்    அடுத்து::பகவத் கீதை  

பாவம் -- புண்ணியம்

Image
பாவம்               நாம் நம்மை அறியாமலே பாவமும், புண்ணியமும் செய்து கொண்டே இருப்போம்.  நில்லாப்  பிழையும் ,  நினையாப் பிழையும்   கல்லாப்  பிழையும்,  கருதாப்  பிழையும்,  சொல்லாப்  பிழையும், துதியாப்  பிழையும், தொழாப்  பிழையும், எல்லாப்  பிழையும் நம்மை அறியாமல் நிகழும். புண்ணியம்                  நாம் அறியாமல் நிகழாது.  நாம்  புண்ணியம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்  ஆழமாக  வரவேண்டும்.  சொல்லால், மனத்தால், எண்ணத்தால்,  நினைவுகளால்,  செயலால்... பாவத்தின் பலன்                    அது செய்வோரை மட்டுமே அழிக்கும்.  வேறு  யாரிடமும்  செல்லாது.  எத்தனை, எத்தனை  பிறவிகள்  எடுத்தாலும் அது செய்தவரை  மட்டுமே பல மடங்காக பெருகி  சென்றடையும்.                    பாவக்கணக்கு  பெருகி கொண்டே போனால்  பிறவிகள் தோறும் அல்லல்பட்டு வீழ்வோம் என்பதனால் தெரிந்தும், தெரியாமலும், அறிந்தும், அறியாமலும்  கூட சிறு பாவமும் செய்யாமல் இருக்க முயற்சிப்போம். புண்ணிய கணக்கு :                    நாம் செய்யும் சிறு புண்ணியமும்  பல்  மடங்காக  பெருகி நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் , நம்  தலைமுறையினருக

பொய்மை -- வாய்மை

Image
ஹரிச்சந்திரா   பொய்மை -- வாய்மை [ சத்தியம், உண்மை]: பொய்                                                  துஷ்பிரயோகம்                             அதிகாரம்                                          சத்தம்                                                    சபை  ஏறும்                                      வேகமாக  பரவும்                                                    படு தோல்வி    அடையும்                                                                              வாய்மை அடக்கம் நிதானம்  மென்மை  சபை  ஏறாது  இருக்கும்  இடத்திலேயே  இருக்கும் ஜெயம்  மட்டுமே   அடையும். பொய்மை:                பொய்  என்றும்  வாய்மையிடம் [சத்தியத்திடம் ]  தோற்றுப்  போகும்.                முதலில்  வெற்றி  பெறுவது  போல்  தோன்றும்  ஆனால்  இறுதியில்  நீர்குமிழ்   போல்  மறைந்து விடும்.  இருக்கும்  தடம்  தெரியாமல்  போய்விடும். சத்தியம்:                 சத்தியம்  தோற்பது  போல்  வெகு  நிதானமாகத்  தான்  கடக்கும்.                 இறு

திருமணம் இனிதே நடைபெற

Image
திருமணம் இனிதே நடைபெற :                         வெள்ளிக் கிழமை இராகு காலத்தில் பூஜையைச் செய்தல் வேண்டும்.  அன்று தலைக்கு  குளித்து  தூய  ஆடை  உடுத்தி  பூஜை  அறையையும், வீட்டையும்  தூய்மைப்  படுத்த வேண்டும்.  விளக்குகள்  ஏற்றி  வைத்து  அழகு  படுத்த  வேண்டும்.   பூஜைக்கு  ஒரு  தாம்பாளத்தில்  அரிசி  வைத்து  அதன்  மேல்  கலசம்  வைக்க  வேண்டும்.  கலச  சொம்பில்  தண்ணீர்  ஊற்றி  சிறிது  மஞ்சளிட்டு  அதில்  நாணயம்  இடலாம்.  மாவிலை  [9]  எண்ணிக்கையில்  வைத்து  அதன்  மேல்  கலச  தேங்காய்  வைக்கவும்.  நாரோடு  கூடிய  தேங்காய்  அதற்கு  மஞ்சள்  பூசி  குங்குமம்  வைத்து  பூக்களால்  அலங்கரித்து  இரு  பக்கமும்  குத்துவிளக்கு  ஏற்றி  விடவும்.  பின்  தளிகை  [வெல்லம்  அரிசியால் ]  செய்து வாழை இலையில்  வைத்து  பூஜையை  சரியாக  10.40 am  க்கு  இராகு காலத்தில்  தொடங்கவும்.                தூப  தீபங்கள்  காட்டி  தேங்காய்  உடைத்து  இருபக்கமும்  வைத்து  பிரார்த்திக்க வேண்டும்.                கலசத்தை  துர்கையாக  நினைத்து  துர்கை  அம்மனுக்கு  ஸ்தோத்திரம்  சொல்லி  பாடல்கள்  பாடி  திருமண

பணத்தின் அருமை பெருமை :

Image
சிந்திக்க:               பணம்  - பெருமை - அந்தஸ்து - செல்வாக்கு,  கம்பீரம்,  புகழ்  என அனைத்தையும்  தருகிறது.  அதனால் பணத்திற்கு  முக்கியத்துவம்  நம்  முன்னோர்கள், மூதாதையர்கள்  என  அனைவரும்  மரியாதை  கொடுத்து  கடைசியில்  நாம்  பணத்திற்கு  முக்கியத்துவம்  தருவதை  விட்டுவிட்டு  அதில்  மிதப்பவர்களுக்கு  முக்கியத்துவம்  தர ஆரம்பித்துவிட்டோம்.                    பணத்தின் பெயர்  சொல்லி  பல  பழமொழிகள்  உதாரணத்திற்கு  வந்துவிட்டது.     அதில் சில            '' பணம் உள்ளவன் பாட்டாளி                பணம்  பாதாளம் வரை பாயும்                 பணம் இல்லை என்றால் நீ செல்லா      காசு                              பணம் பந்தியிலே                 பணம்   இல்லை என்றால்  உன்னை  ஒருவருக்கும் தெரியாது               பணம்  இருப்பவர்கள்  வீட்டில்  பிணம் கூட அழகு " என்று  பிள்ளைகள்  வளரத்  தொடங்கும்  முன்பே  பணத்தின்  அருமை  பெருமைகளைச்   சொல்லி  சொல்லி   பணம்  தேடல்  என்னும்  விதை  எல்லோர்  மனதிலும்  நுழைந்தாகிவிட்டது.   விளைவு:                 பணத்திற்காக  அதை  அடைவதற்காக  

கர்ம வினை பலன் நீங்க:

Image
                        நாம் தொடர்ந்து எத்தனையோ பிறவிகள் எடுத்திருப்போம்.  அப்போதெல்லாம் நம் வினைப் பயனை அனுபவித்துக் கொண்டே இருந்திருப்போம்.                                அத்தனை பிறவியிலும்  நம் வினைப் பயனை நீக்க நாம் எதுவும் செய்திருப்போமா? நாம் அறியோம்.  மானுட பிறவியில் மட்டுமே நம் கர்மாவின் பலனை நீக்க முடியும் என அறிக.              இந்த  மானுட பிறவியில்  கர்ம  வினை பலன் நீக்க முயற்சிகள் மேற்கொள்வோம். இப்படித்  தொடர்ந்து  தேங்கி வரும் கர்ம வினைகளின் முடிச்சுக்களைத் தீர்க்க வலிமையான எளிய மந்திரம்                                                    அ ங்                               உ ங்                              சி ங் ஓம் - அங், உங், சிங் என பீஜாட்சர சக்தி வாய்ந்த சித்தர்கள் மந்திரத்தை உரு ஏற்றி வழிபடுவோம்.              கர்ம  வினைப்பயனை  நீக்கி  நல்வாழ்வு பெறுவோம்.  அடுத்து :: பணத்தின் அருமை பெருமை 

போகர் [ சித்தர்]

Image
போகரை பற்றி இனி சிறிது காண்போம்.                அருள்மிகு பழனி  தண்டாயுதசாமி அருள் திருமேனியை நவபாஷாணக் கட்டினால் நிறுவியவர்.                 இவரின் வரலாறு நாம் அறிவது அவசியம் என்றுணர்ந்து அவரைப் பற்றி சிறு தொகுப்பினை இங்கு பகிர்கிறேன். பிறப்பு:            " திருநந்தி தேவரே '' பலவகைப் பிறப்புக்களை அடைந்து பின்பு 'போகராக' பூமியில் தோன்றியதாக வரலாறு. காலம்:             ஐந்தாயிரம்  [  5000  ] ஆண்டுகட்கு முன்னதாக இருக்கலாம் என அறியப் படுகிறது. நூல்கள்:            மருத்துவ , ஜால நூல்கள் போகரால் போகர் ஏழாயிரம், போகர் எழுநூறு என எழுதப்பட்டவை. " புலிப்பாணிச் சித்தர்" இவருடைய சீடராவார்.           '' வான வழியில் சீனம், உரோமாபுரி, மெக்கா, மதினா ஆகிய இடங்களுக்கு சென்றவர்''.         போகர் '' மருத்துவம், இரசவாதம், காயகற்பம், கணிதம் '' போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்கியவர்.         போகர் இறுதிக் காலத்தில் பழனித் தலத்தில் தங்கிவிட்ட இவர் பழனி மலையின் மேல் தாம் அமைத்த திருக்கோவிலின் கண், நவபாஷாணக் கட்டினால் ப

சித்தர்கள்

Image
சித்தர்களைப்  பற்றி படித்ததில் சிறிது:              சித்தர்கள் இவர்கள் தவ யோக ஆற்றல்கள் பெற்றவர்கள் நவ நாத  சித்தர்கள், பதினெண்  சித்தர்கள் எனப்படும் இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். இவர்கள் அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்கள்.               சித்தர்களைப்  பற்றி  அறிய ஆவல் கொண்டு படித்ததில் பிடித்த விஷயங்களை மட்டும் தங்களுடன் பகிர்கிறேன்.            மூலர், காலாங்கி, போகர், கொங்கணார், கோரக்கரைப் பற்றி படிக்கையில் பல வியத்தகு விஷயங்களை அறிய நேர்ந்தது.     சித்தர்களின் குண நலன்கள்:            மனித குல நல்வாழ்வில் நாட்டம் கொண்டு தொண்டு புரிந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள்.            அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிரகாமியம், ஈசத்துவம் எனப்படும் அஷ்டமா ஸித்திகளைப் பெற்றவர்கள்.             சித்தர்கள் பாடல்கள் தத்துவக் களஞ்சியமாக உண்மையை உணர்த்தக் கூடியது.        அடுத்து:போகர்[சித்தர்]            

வாழ்வியல் பாடங்கள்

Image
  சிந்திக்க:                 நாம் விதியின் கை விளையாடும் சராசரி மானுடர்களே.        வாழ்வில் சோதனைகள் வரும் போது கீழே விழுந்திட்டால் சட்டென வீறு கொண்டு எழுவாய்.       விழும் போது உன்னைப்  பார்த்துச் சிரிப்பவர்களைக்  கண்டு சினம் கொள்ளாதே.       கை தூக்கி விடவில்லையே என்று கலக்கம் கொள்ளாதே.         அப்போது தான் மறுமுறை வீழ்ந்திடாமல் எச்சரிக்கையுடன் இருப்பாய்.         அப்படியே வீழ்ந்திட்டாலும் மறுபடியும்  " துளிர்ப்போம் " " ஆல் "  போல்   தழைப்போம் என நம்பிக்கை கொள்.         நீ உயரத் தொடங்கும் போது உலகம் உன்னை உற்றுப் பார்க்கும். பல எதிர்மறை கணைகளைத் தொடுக்கும். அதையே படிக்கட்டுக்களாக கொண்டு உயர்ந்துக் கொண்டு சென்று கொண்டே இருந்தால் அதே உலகம் உன்னை முன்னுதாரணமாகக் கொள்ளும் என்பதை மறவாதே.          அடுத்து::சித்தர்கள்       

வராகி அம்மன்

Image
             காளி தேவி ஆதி சக்தி ஆவார் அவரே உலக நாயகி              அவரின் வடிவான வராகி அம்மனை பற்றி பார்ப்போம்.                                                அன்னை வராகியின் 12 பெயர்களை ஒரு மணி நேரம் வரை [ இரவு பொழுதில் ] ஜபிக்க வேண்டும் ; இப்படி தினமும் ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை ஜபித்து வருவதன் மூலமாக உங்கள் ஆத்ம பலத்தை அதிகரித்துக் கொள்ளலாம்; கண்டிப்பாக அசைவம் , மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும். அந்த 12  பெயர்கள் வருமாறு: பஞ்சமீ  தண்டநாதா  சங்கேதா  சமேஸ்வரீ  சமய  சங்கேதா  வராகி  போத்ரிணி  சிவா  வார்த்தாளீ  மகாசேனா  ஆக்ஞாசக்ரேஸ்வரீ  அரிக்நீ  ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இரவுப் பொழுதில் ஜபித்து வந்தால்,            உங்களுக்கு எதிரான சதிகள் அனைத்தும் தகர்ந்து விடும்;          யாரா வது கடந்த காலங்களில் மாந்த்ரீக தீங்குகள் செய்திருந்தால் அது விலகி விடும்;           எதிரிகளும், துரோகிகளும் ஒரு போதும் உங்களை நெருங்கவோ, தீமை செய்யவோ முடியாது;           உங்களிடம் இருக்கும் கெட்ட சுபாவங்கள் உங்க

பேச்சும் - செயலும்

Image
சிந்தனைக்கு: இந்த [சமுதாயத்தில்] உலகம்,  அதிகம் பேசுபவரை - வேடிக்கை பார்க்கிறது  அளந்து  பேசுபவரை - வியந்து  பார்க்கிறது  மௌனமாக இருப்போரை - அளப்பரிய ஆச்சரியத்தோடு  பார்க்கிறது  பொறுமையாக  இருப்போரை  - உற்றுப்  பார்க்கிறது  நிதானமாக சிந்தித்து செயல்படுவோரை - தலை நிமிர்ந்து உயரே  பார்க்கிறது  இதில் நாம் யாராக இருக்க வேண்டும்? நேற்று  -  கடந்த காலம்  நாளை -  எதிர் காலம்  இன்று  -  நிகழ் காலம்  இன்று மட்டுமே நிஜம். நாம் நிஜத்தில் வாழ வேண்டும். கடந்த காலங்களின் அனுபவங்கள் நம் ' நிழலோடு' இருக்கட்டும். அது வாழ்க்கை நமக்கு தந்த அனுபவ பாடங்களாக ஏற்றுக் கொள்வோம். எதிர்  காலம் - எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி கவலை, அச்சம் கொள்ளாமல் பயணிப்போம். ''நேற்றைய'' அனுபவங்களை சுமந்துக் கொண்டு ''இன்று'' என்கிற நிஜத்தில் மிகக் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து செல்வோம் என்றால் ''நாளை'' என்ற எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். பேசுவது - மனிதர்களுக்கு உரிய உயர்ந்த சிறப்புகளுள் ஒன்று. ''  குறிப்பறிந்து பேசுக    சிந