உறவுகள்




              
                                    உறவுகளைப் பற்றி ஆயிரம் கருத்துக்கள் சொல்லிக் கொண்டே போகலாம். உறவுகள் வாழ்வின் ஆதாரம், நம்பிக்கை. ஒரு மரத்தின் வேர் போன்றது. வேர்கள் ஆரோக்கியமாகவும் உறுதியுடன் இருந்தால் மட்டுமே மரம் செழுமையாக இருக்க முடியும். விழுதுகள், மரத்தை தாங்கலாம். அதுவே மரத்தை வளர்க்க முடியாது.

Related image

"விழுதுகள் வேரூன்ற மரத்தின் 'வளம்' குன்ற ஆரம்பித்துவிடும்".



உறவுகளும் அப்படித்தான்:


                              தகப்பன் சொல் கேளா பிள்ளைகளிடம் தன்னடக்கம் இருக்காது. தான் தோன்றி தனமாக வாழ்வார்கள்.


                              தாயின் பாசம் உலகில் உயர்ந்தது. அதற்கு நிகர் வேறில்லை.
         

                             தாரத்தின் அன்பு வேறெங்கும் கிடைக்கக் கூடியதில்லை.

                             கணவன் கெட்டுப் போனாலும் மனைவியின் கண்ணீர் பலம் கூட்டும்.

 உலகை புரிந்து வாழ்ந்து உயர்வடைவோம்.


அம்மை அப்பன் பாதம் போற்றி
ஆனை முகன் பாதம் போற்றி
குருநாதர்கள் பாதம் போற்றி
பதினென் சித்தர்கள் பாதம் போற்றி
என் குல தெய்வம் பாதம் போற்றி

                          பகவானே என்னிடமுள்ள தன்னடக்கமின்மையை நீக்கி என் மனம் கட்டுபாட்டிலிருக்கும்படி செய். எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்துகிற வண்ணம் என் இதயத்தை விசாலப்படுத்து. சம்சார சாகரத்தை கடக்க எனக்குத் துணை செய்.


அடுத்து::பணத்தட்டுப்பாடு நீங்க 

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்