மனிதர்கள் - மனம்:

மனிதர்கள் -  மனம்: 

Image result for different faces masks
               மனிதர்கள் நாம் நமக்குள்ளும் நிறைய முகங்கள், நிறைய குணங்கள் உண்டு. உள்ளம் ஒன்று, எண்ணங்கள் வேறுவேறு நாம் சிலருக்கு நல்லவர்களாகத்  தெரிவோம். பலருக்கு வேண்டப்படாதவர்களாக இருப்போம். இது இயல்பு. 

Image result for bee on flower

             நமது மனமானது மலரிலுள்ள தேனை மட்டும் உறிஞ்சும் தேனீக்களைப் போல் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஈக்களைப்  போல் வாழ ஆசை படக்கூடாது ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கும். அறுசுவை உணவின் மீதும் அமரும், தூய்மை அற்ற இடங்களிலும் வேறுபாடு இல்லாமல் இருக்கும்.

                மஹான்கள், ஞானிகள் தேனீக்களை போன்றவர்கள். மனிதர்கள் ஈக்களைப் போல இருந்தாலும் அதிலிருந்து வெளியில் வர பழக வேண்டும்.

Image result for bee on flower

தன்மை-- இயல்பு 

            சில நேரங்களில் நம்மிடை உயரிய பண்புகள் தோன்றும் பல நேரங்களில் சிறுமை, கோபம், பொறாமை, புறம் கூறுதல் போன்ற குணங்களும் காணப்படும். உயரிய பண்புகளான அஹிம்சை, உண்மை, பக்தி, ஒழுக்கம், நா- நயம், சத்தியம் பேசுதல் போன்றவை தோன்றத்  தோன்ற சிறுமையான குணங்கள் நம்மை விட்டு சிறிது சிறிதாக போய்விடும்.


Image result for good habits in tamil images  
         உடல் மனம் புத்தி எண்ணம் செயல் என அனைத்தும் பவித்ரமாகி நாமும் தெய்வ நிலைக்கு உயரலாம்.

Image result for lord parvathi parameshwara
           ஜகத்துக்கெல்லாம்  தாய்  தகப்பனாய் இருக்கிற பார்வதி பரமேசுவரரை [ அவரவர் இஷ்ட தெய்வங்களை ] ஸ்மரித்துக்  கொண்டிருந்து, 

"ஜகத்: பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரௌ"  என்று சரண் அடைய வேண்டும்.      

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்