சனீஸ்வரர்:
சனீஸ்வரர்:
நவகோள்களில் ஈஸ்வரர் பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
நவகிரகங்களில் சனிபகவான் "நீதி" தவறாதவர். அவரவர் "கர்ம" வினைகளுக்கு உரிய பலனைத் தவறாமல் வழங்குபவர். நம்மில் பலருக்கும் "சனி" எனும் பெயரைக் கேட்டதுமே பயம் தொற்றிக் கொள்ளும். அது தேவையே இல்லை. "ஆயுள் காரகன்" எனப்படும் சனிபகவான் கருணை வள்ளல்.
முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து நம் பாவச் சுமைகளை களைக்கும் கிரகநாதன் இவர்.
ஒன்பது கிரகங்களில் "சந்திரன்" மிக வேகமாகச் சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் இரண்டே கால் நாட்கள் தான் இருப்பார் . ஆனால் சனீஸ்வரர் மெதுவாகச் சுற்றுவார். ஒரு கட்டத்தை [ இராசியை] கடக்க இரண்டரை வருடம் எடுத்துக் கொள்வார். "மந்தன்" எனப் பெயரும் உண்டு.
சனீஸ்வரருக்கு ஒரு கால் பலவீனமானது. எப்படி எதனால் என்றால்
இராவணன் தன மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெறவேண்டும் என்பதற்காக தன தவத்தின் வலிமையால் நவகிரகங்களான ஒன்பது கோள்களையும் பதினோராம் கட்டத்தில் [வீட்டில்] அடைத்து விடுகிறான்.
11ஆம் வீடு என்பது வெற்றியையும், இலாபத்தையும் குறிக்கும். இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் பதினோராம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.
தேவர்கள் மனம் பதைத்தனர். ஓர் அரசன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணம் நெருங்காது என அஞ்சினர்.
அப்போது நாரதர் சனிபகவனிடம் சென்று உன்னால் தான் ஒருவருக்கு அழிவை தர முடியும். ஆகவே மற்றவர்களை நீ தான் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்க
சனிபகவானும் அதற்கு இணங்கி "இந்திரஜித்" பிறக்கும் சமயத்தில் தன இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார்.
இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகம் கணித்துப் பார்த்தான். சனீஸ்வரர் 12ஆம் இடத்தில காணப்பட்டத்தைக் கண்டு கடும் சினம் கொண்டு சனிபகவானின் இடது காலை வெட்டுமாறு பணித்துவிட்டான். அதனால் அவரது இடது கால் ஊனமானது.
Comments
Post a Comment