தானம் -- தர்மம்

தானம்:

        தானம்  என்பது  மற்றவர்களுக்கு  அள்ளி   அள்ளி   கொடுப்பது.

உதாரணம் :


Image result for karnan

கர்ணன்
               தன்னிடம்  வருவோர்க்கு  இல்லை  என்று  கூறாமல்  தானம்  செய்து  சரித்திரத்தில்  கொடை  வள்ளல்  என  நீங்கா  பெயர் பெற்று  தானத்திற்கு  கர்ணனே    சான்று  என்று  வாழ்ந்து  காட்டியவர்.

தர்மம் [ அறம் ]:

உதாரணம்:

யுதிஷ்டிரன் [ தர்ம  மகாராஜா ]  பாண்டவர்களில்  மூத்தவர்.

           அறத்தின்  வழி  வாழ்ந்து  காட்டியவர்.   

           தர்மம்  --  வடமொழிச்  சொல் 

           அறம்    --   தமிழ்ச்  சொல்.

           வாழ்க்கையில்  தர்மத்தை  கடைபிடித்து  இறுதி  வரை  அறநெறி  தவறாமல்  வாழ்ந்தவர்.

            யுதிஷ்டிரர்-  சூதாட்டத்தில்  தோல்வி  பெற்று   [ வஞ்சகத்தால் ]  அஸ்தினாபுரத்தை  விட்டு  துரியோதனன்  காண்டவ  வனம்  என்னும்  வறண்ட  பூமிக்கு  போக உத்தரவிட்டதும்  மௌனமாக  ஏற்றுக்கொண்டார். 

Image result for dharman mahabharath

            பாண்டவர்கள்  நால்வரும்  சாபம், சபதம்  செய்த  போதும்  ஒரு  வார்த்தையும் [ கடுஞ்சொல் கூட ] பேசாதவர். கிருஷ்ணர்  தூதுவராக  போக  முற்படும்  போதும்  போர்  வேண்டாம்  ஐந்து  கிராமங்களே  போதும் என  ஸ்ரீ  கிருஷ்ணரிடம் முறையிட்டவர்.


              ஒரு  முறை வன  வாசத்தில்  தம்பியர்  நால்வரும்  உயிரற்ற   நிலையில்  உள்ள  போது  யாராவது  ஒரு உயிர்  தான் தர முடியும் என்று  சொல்ல  நகுலன், சகாதேவன்  இருவரில்  ஒருவரை  தரும்படி  பூதகணத்திடம்  கூறினார்.

Related image

              என் அன்னைக்கு  எங்கள்  மூவரில்  நான்  ஒருவன் [ தர்மன்,  பீமன்,  அர்ச்சுனன்]  என் சிற்றன்னைக்கு  இருவரில்  [ நகுலன், சகாதேவன் ] ஒருவரைத்  தாருங்கள்  என்றாராம்.

              பூதகணமாக [ எமதர்மராஜா ]  வந்தவர்  அனைவரையுமே  உயிர்ப்பித்து  தலை  வணங்கியதாக  சொல்லப்படுகிறது.


கர்ணன்:

              வாழ்நாள்  முழுவதும் தானம்  செய்து மகிழ்ச்சி  கொண்டவர்.

               அதன் மூலம்  வந்த ' புண்ணிய  பலனையும்' தானம் செய்தவர்.
Related image

யுதிஷ்டிரன்:

               வாழ்நாள்  முழுவதும் தர்மத்தின் வழி நின்று  சோதனைகள்  கண்டபோதும்  தர்மம்  சிறு  அணு  அளவும்  தவறாதவர்.


                 தானங்கள்  செய்து  தர்மம் வழியில்  வாழ்ந்து நிம்மதி பெறுவோம்.

                நாம்  கர்ணனாகவோ ,  தர்மராகவோ  இல்லை  என்றாலும் நம்மால் முடியும் வரை  நல்  வாழ்வு  வாழ்வோம்.

நலங்கள்  பெற்று  மகிழ்வோம்.       




அடுத்து::சித்திரை   மாதம்  ஞாயிறு  அன்று   குழந்தை  பிறந்தால் 












Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்