தமிழின் பெருமை
சில துளிகள்:
" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாகிலும் எங்கும் காணோம்."
சங்கத் தமிழ் புலவர்களின் புலமைகளை அவர்கள் இயற்றிய நூல்களில் நமக்கு முழுவதும் கிடைக்கவில்லை என்றே அறிகிறோம்.
ஓலை சுவடிகளில் வடிக்கப் பெற்று நமக்கு இவ்வளவும் கிடைக்க பெற்றதே நம் பாக்கியம்.
இதையும் நம் தமிழுக்கு தமிழ் மண்ணுக்கு சான்றாக பெருமை என போற்றுவோம்.
தமிழ் மொழி சாகா வரம் பெற வேண்டும் என்பதே தமிழ் கற்றவர்களின் அவா.
தமிழ் -- அமிர்தம்
மூத்த மொழி-- தமிழ்
இயல், இசை, நாடகம் என இதனுள் அடங்கும்.
பைந்தமிழ், தீந்தமிழ், அழகுத்தமிழ் எனத் தமிழோடு புலவர்கள் கவிநயம் புனைந்து மகிழ்வார்கள்.
தமிழ் மொழிக்கு நிகர் -- தமிழே
மொழிகளில் முதன்மையான மொழியும் தமிழ்
படித்ததில் கிடைத்த தகவல்:
2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி -- உலக மொழி
20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி -- தமிழ்
20000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் -- தமிழ்
1,00,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இனம் தோன்றி இருக்கலாம்.
சாட்சி:
குமரிகண்டம் மற்றும்
லெமூரியா கண்டம்
மாபெரும் இரண்டு கண்டங்களையும் 13 தேசங்களையும் கட்டி ஆண்டவர்கள் -- வீரத் தமிழர்கள்.
தமிழைப் போற்றி புகழாதவர்கள் யாரும் இல்லை.
இனி வரும் காலங்களில் கம்பரைப் போல், வள்ளுவரைப் போல், இளங்கோவடிகள்ப் போல், சமண, சமயப் புலவர்களை போல் எங்கும் காண்போமா?
அடுத்து::தன்வந்தரி [ மருத்துவக் கடவுள்]
Comments
Post a Comment