தேகம் கவசம் கொண்டு காக்க
மோட்டார் சைக்கிளில் செல்லும் போது விபத்து ஏற்படாதிருக்க:
வீட்டை விட்டு கிளம்பும் முன் தன் மனைவி (அ) தாயின் கையால் ஒரு குவளையில் தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு செல்லவும். வீட்டில் உள்ளவர்கள் மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லி அனுப்பவும்.
வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் மனதினுள்
" வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எனைக் காக்கும் சுப்பிரமணிய வேல் "
என்று 6 முறை சொல்லி கொண்டே வண்டியை வெளியே தள்ளி பயணிக்க வேண்டும்.
போகும் போது வீட்டை திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும், விபத்து ஏற்படாது.
குடும்பத்துடன் வெளியே செல்லும் போது (அ) தனியாக செல்லும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
"ஓம் வனமாலி கதி ஸார்ங்கீ சங்கீ சக்ரீ ஸனந்தகீ ஶ்ரீமன் நாராயணோ விஷ்ணோ வாசுதேவ அபிரக்ஷது "
என்று 3 தடவை சொல்லி விட்டு
" ஓம் கேசவாய நம"
என்று 3 தடவை சொல்லி விட்டு கிளம்பவும்.
எமபயம் நீங்க
"ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ"
என்ற மந்திரத்தை தினமும் முடிந்த அளவு சொல்லி உரு ஏற்றி வர காலன் உம்மை எளிதில் அனுக முடியாது.
தேகம் கவசம் கொண்டு காக்க:
"ஓம் ஹ்ரீம் சிவாய நமஹ "
என்று சொல்லி உரு ஏற்ற கவசமாக இருந்து உங்கள் தேகத்தை காக்கும்.சிந்தனைக்கு
பிறர் கேட்டு உதவி செய்வது மனித நேயம் - அது தானத்தில் சேரும்பிறர் கேளாமல் அவர்களின் தேவைகளை குறிப்பறிந்து செய்வது (முன்பின் அறியாதவர்க்கு) - அது தர்மத்தில் சேரும்.
தர்மம் -- புண்ணியத்தில் சேரும்
ஆதலால் உங்களால் முடிந்த அளவு இயலாதவர்களுக்கு தர்மம் செய்யுங்கள். அந்த புண்ணியம் பல மடங்காக உங்களுக்கே திரும்ப கிடைக்கும்.
அடுத்து: சிந்தனைக்கு
Comments
Post a Comment