ஶ்ரீ சீதா சமேத இராம பாத சேவகன் - தொடர்ச்சி

Image result for hanumaan



அனுமன் - அழகு

வீரம்,
பலசாலி,


தைரியம் - சஞ்சீவி மலையை கையாலே தூக்கி பறந்து வந்தவர்.

அறிவாளி - சீதையை இலங்கையில் கண்டவுடன் ஶ்ரீராமர் கொடுத்தக் கணையாழியைக் காண்பித்து நம்பிக்கை கொடுத்தவர்.

     ஶ்ரீராமரிடம் - இலங்கையில் இருந்து திரும்பியவுடன் சொன்ன முதல் வார்த்தை " கண்டேன் அன்னையை "
என்று சொல்லி இராமருக்கு சீதை பற்றி இருந்த கவலையை விலக்க, இராமன் அனுமனை " சொல்லின் செல்வன் " என்று பாராட்டினார்.
   

       இது அவர் புத்தி கூர்மைக்கு ஒரு சிறு சான்று மட்டுமே.

       அனுமனிடம் பிரார்த்தனை செய்யும் போது கோரிக்கை இன்றி செய்யக் கூடாது.

ஶ்ரீராம நாமம் கூறி இராமரின் துதி பாடிவிட்டு அனுமானை வழிபட, அனுமன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, வேண்டும் பக்தர்கள் வேண்டுவன யாவும் அருளிடுவார்.

    தூய்மையான பக்திக்கு மட்டுமே அனுமன் கட்டுபடுவார்.

   அனுமனை வேண்டுபவர்களுக்கு சனீஷ்வரபகவான் தீங்குகள் செய்ய மாட்டேன் என உறுதிக் கொடுத்தாராம்.
   ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச் சனி, அர்தாஷ்டம சனி நடப்பவர்கள் அனுமனை வேண்டி வந்தால் எந்த வித கலக்கமும் அடைய தேவை இல்லை.

அனுமனை வேண்டினால்:

அழகு,
வீரம்,
பலம்,
தைரியம்,
விவேகம்,
அடக்கம் எல்லாம் நமக்கும் தானாகவே வரும்.

அனுமன் சாலிசா, அனுமத் கவசம் இதை வீட்டில் போட்டு கேட்டு வந்தாலே நம் தோஷங்கள் அனைத்தும் அகன்று விடும்.

சுந்தர காண்டம் : கருவுற்ற தாய்மார்கள் கருவுற்ற ஐந்தாம் மாதத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தால் சுகப்ரசவம் ஆகும் என்பது ஐதீகம்.

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இதைப் படிக்கலாம்.
     ஶ்ரீராமரையும் சீதையையும் ஒன்று சேர்த்தவர் அல்லவா.

அனுமன் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.
   
      அனுமர் ஶ்ரீராமர் வைகுண்டம் புறப்படலாம் என்ற போது, இவர் தயங்கி நான் தங்களுடனே வரவேண்டும் என்பது தான் என் விருப்பம் ஆனால் அதை விட ஶ்ரீராம நாமம் ஜெபம் என் செவிகளில் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.


அதனால் நான் இந்த பூ-வுலகத்திலேயே இருந்துக் கொண்டு இராம ஜெபம் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் தயை புரிந்து அருள் புரிவீராக ! என்று பணிவுடன் சிரம் தாழ்த்திக் கேட்டதும் ஶ்ரீராமரும் அப்படியே ஆகட்டும் என வாழ்த்தினாராம்.


        அனுமர் பூ-வுலகத்திலேயே வாசம் செய்கிறார்.
        இவர் - ஶ்ரீராம தூதன்


அடுத்து: சுலோகங்கள்

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்