ஶ்ரீ சீதா சமேத இராம பாத சேவகன்
சீதை தன் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது பார்த்து இது எதற்கு என அனுமன் கேட்க ஶ்ரீராமர் நலமுடன் இருப்பதற்காக நான் அனுதினமும் வைக்கிறேன் என்று சீதை சொல்ல அனுமன் கவலையுடன் செல்வதைப் பார்த்து இராமர் சீதையிடம் நீ இப்படிச் சொன்னதைக் கேட்டு அவன் வேறு ஏதேனும் செய்வான் பார், என்னிடம் பக்தி உன்னை விட அவனுக்கு தான் அதிகம் என நிரூபிக்க துடிக்கிறான், என்று கூறி முடிப்பதற்குள் அனுமன் தன் தேகம் முழுக்க செந்தூரம் பூசி எதிரில் வந்தாராம்.
என்னப்பா இது என்று கேட்க, அன்னை உங்கள் நலனுக்காக நெற்றியில் சிறிது செந்தூரம் வைத்திருக்கிறார்கள். நான் என் உடல் முழுக்க பூசி வந்துவிட்டேன் உங்கள் நலனுக்காக என்றதும் ஶ்ரீராமர் புளங்காகிதம் அடைந்து அனுமனை தாவி அணைத்துக் கொண்டாராம்.
சீதை மனமகிழ்ந்து நான் அனுமனுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லையே எது கொடுத்தாலும் ஈடாகாது என்று எண்ணிக் கொண்டாராம். தன் கையில் உள்ள கற்கடம் என்ற அணிகலனை அவர் கையில் போட்டுவிட்டு இது உனக்கு கவசமாக செயல்படும் என்று வாழ்த்தினாராம்.
அனுமனின் இதயத்தில் ஶ்ரீராமரும் சீதையும் மட்டுமே குடிக்கொண்டனர். இவரை வணங்கினால் ஶ்ரீராமரின் அருளும் நமக்கு எளிதாகக் கிடைக்கும்.
அடுத்து: ஶ்ரீ சீதா சமேத இராம பாத சேவகன் - தொடர்ச்சி
இந்த பதிவை பகிர்ந்ததற்க்கு நன்றி அம்மா.
ReplyDelete