ஞானம் பெற

           
சரஸ்வதி தேவி வழிபாடு 





            நல்ல கல்வி அறிவு பெற ஞானம் பெற (குழந்தைகட்கு)


            முதலில் விநாயகரை ஞானம் பெற வழிபாடு அடுத்ததாக கலைவாணி சரஸ்வதி தேவி வழிபாடு.
ஹயக்ரீவரையும் வழிபட வேண்டும்.

          குழந்தைகளுக்கு இரண்டரை வயது முடிந்தவுடன் பூஜை அறையில் வளர்பிறை சுபநாளில் புதன்கிழமை காலை 6-7 மணி அளவில் புத ஹோரையில் ஒரு தாம்பாளத்தில் அரிசி (அ) நெல் பரப்பி அதில் சிறிது பூக்களும் மஞ்சளும் இட்டு சரஸ்வதி தேவியை பிரதானமாக வைத்து அவர் எதிரில் தாம்பாளத்தை வைத்து இரு பக்கமும் குத்து விளக்கேற்றி பழம், பூ, வெற்றிலை பாக்கும் அதனுடன் வெண்பொங்கலும் படையலிட்டு தூப தீபங்காட்டி தேங்காய் உடைத்து இரு பக்கமும் வைத்து விடவும். 

Related image


             பின் எதிரில் மனை போட்டு அமர்ந்து தாய் தன் மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு அந்த நெல் மணியில் 'ஓம்' என்ற எழுத்தை குழந்தையின் கையை பிடித்துக் கொண்டு விரல்களினால் எழுதச் செய்ய வேண்டும். அதற்கு அடியில் அகாரத்தின் முதல் எழுத்தான '' என்ற எழுத்தையும் குழந்தையின் கையால் எழுத செய்ய வேண்டும்.

                பின் அந்த வெண் பொங்கலை குழந்தைக்கு கொடுத்து விட்டு மற்றவர்களுக்கும் பகிரலாம்.

Image result for worshipping saraswati

            முடிந்தவர்கள் கூத்தனூர் சென்று சரஸ்வதி தேவியை வழிபடலாம்.

2. குழந்தைகள் பேசப் பழகியவுடன் "அகார உகார மகாரம்" முதல் எழுத்தின் பிரதானமான 'அ' - சொல்லித்தர வேண்டும்.

முதல் ஐந்து வருடங்கள் கழித்து குழந்தைகளுக்கு அகத்திய மாமுனி அருளிய " வாணி ஸ்ரீம் காயத்திரி " (Vani Sreem Gayathri) என்னும் மாமந்திரத்தை தொடர்ந்து அவ்வப்போது ஜபித்து வர செய்தால் குறைந்தது ஒரு இலட்சம் (1,00,000) உரு ஏற்ற வேண்டும். தினமும் தூய சந்தனத்தை குழைத்து நெற்றியில் இட்டு பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

               Image result for dakshinamurthy   
     குரு தெக்ஷிணா மூர்த்தியையும் வழிபட்டு வரவும். இதனால் குழந்தைகள் கல்வியில் மேன்மை நிலையை அடைந்து உயர்பதவிகள் பெற்று அதி மேதைகளாக இப்புவியில் வலம் வந்து பெற்றவர்களுக்கும் பெருமை சேர்ப்பார்கள்.
       
         நல்வழிப் பாதையில் பயணிப்பார்கள்.
         
சரஸ்வதி தேவி வழிபாட்டு ஸ்லோகம்:
       
ஆயக் கலைகள் அறுபத்து நான்கினையும்  ஏய உணர்விக்கும் என் அம்மை தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாள் இங்கு வாராது இடர்

என மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அடுத்து: அனுபவத்தில் பலரும் பலன் கண்ட மந்திரங்கள்

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்