பக்தி மனம்




' நீ இறைவன் புகழைப் பாடு
  உனது புகழை உலகம் பேசும்'

                 கடமைகளை நாம் தினசரி செய்யும்போது இறைவனுக்கு சமர்ப்பித்தால் அது தெய்வீகமாகிறது.

  "தனக்கும் கீழே மாந்தர் ஒரு கோடி"

இதை நிதம் எண்ணிப் பார்த்து நிம்மதி தேடு.


"பிறப்பு - தாய் தந்தை கொடுத்தது
வளர்ப்பு - கடவுள் கையில்
வாழ்க்கை - விதியின் கையில்"

                    அடியார்களுக்கு கர்மா வழியே துன்பங்கள் சூழும் போது இறைவன் நம்மை கீழே விழ்ந்திடாது தாங்கிக் கொள்வான்.


                   நமது பக்தியானது எப்படி இருக்க வேண்டும் என்றால் தாயைக் காணாமல் அழுது துடிக்கும் குழந்தையிடம் வேடிக்கைகாட்ட தடுத்து நிறுத்த வித விதமான விளையாட்டு  பொம்மைகள், தின்பண்டங்கள் என எல்லாம் தந்து ஏமாற்றச் செய்வார்கள். பலவிதமான முயற்சிகள் செய்து தூங்க வைக்கவும் முயல்வார்கள்.  பல குழந்தைகள் இதில் மயங்கி போய் தாயை மறந்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள். ஒரு சில குழந்தைகள் மட்டும் யாவற்றையும் புறம் தள்ளிவிட்டு தாயைத் தேடி தஞ்சம் அடைவார்கள். நிம்மதியும் பெறுவார்கள்.


                         நம் பக்தியும் குழந்தையைப் போல் தான் இருக்க வேண்டும். (தாய் - இறைவன் )  அந்த இறைவனை நாம் அடைய முற்படும் போது நமக்கும் நிறைய நாம் கேட்பதையும்
கேட்காததையும் கொடுத்தாலும் அதில் மனம் லயிக்காமல் இறைவனை தேடி கண்டு கொண்டால் நம்மை படைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சிக் கொள்வாராம். தாய் ஓடோடி வந்து குழந்தையை பார்த்து மகிழ்வது போல் இறைவனும் நம்மை தேடி வருவார்.

                         நாம் அவரை தேடி செல்வோம். ஆனால் அவர் நம்முடனே நம் நிழலாகத் தொடர்வார்.

                       பக்தியில் ஈடுபடுபவர்களுக்கு சற்று அதிக அளவு சோதனைகள் வருவதுண்டு, வரும். அப்போது மற்றவர்களை பார்த்து சஞ்சலம் அடையக்கூடாது. மனம் கலக்கம் அடைந்து அதில் வருந்தவும் கூடாது. உறுதி கொண்ட மனம் வேண்டும்.

                      பாறையில் சிலை வடிக்கும் போது எவ்வளவு அடி படுகிறதோ அவ்வளவுக்கும் அது தாங்கினால் அது தெய்வச் சிலையாக உருமாறி எல்லோரும் வணங்குவதற்கு உரியதாக போற்றப்படுகிறது.

                        சிறு விரிசல் கூட இல்லாத பாறை கோவிலில் பிரதான தலைவாசல் படிக்கட்டாக வைக்கப்பட்டு மரியாதைக்குரியதாகிறது.

அடுத்து: பக்தி மனம் தொடர்ச்சி...




Comments

Post a Comment

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்