முகவுரை






              உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் குடும்பங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் இந்த பணியைத் தொடங்குகின்றேன். இதை தொடங்குவதற்கு முன் எனது தாய் திருமதி கமலாம்மாள், தந்தை திரு எ கே நடராஜன் அவர்களின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கின்றேன்.

           
என்னை பற்றி சிறு முகவுரை:



              நான் சாந்தா வெங்கடேசன், எனது தந்தை சிறு வயதில் என்னுள் பக்தி என்னும் விதையை துளிர்த்தவர். இறைவன் உன்னை கவனித்து கொண்டே இருப்பார் என்ற எண்ணத்தை என்னுள் திணித்துவிட்டவர். உலகில் அதிகளவில் நான் நேசித்த முதல் நபர் இன்று வரை என் தந்தை மட்டுமே. என் பத்து வயதில் இந்த உலகை விட்டு அவர் மறைந்தாலும் அவர் என்னுள் சிறு துளியாக விதைத்த ஆன்மிகம் என்னும் விதை இன்று முழுமை பெற்ற மரமாக வேரூன்றி என்னுள் உள்ளத்தில் பரந்து விரிந்து பரிணமிக்கின்றது. எனது வாழ்க்கை பயணத்தில் சங்கடங்கள் சூழ்ந்தாலும் என்னுள் இருக்கும் இறைஅருள் பசும்புல்வெளியாக மாற்றி காட்டியது. சோதனைகள் வரும்போது எள்ளளவும் தடம்மாறாமல் பயணிப்போம் என்றால் அதுவே பின்னாளில் சாதனையாக மாறி உங்களை வாழ்வில் உச்சாணிக்கொம்பில் ஏற்றும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.

வாருங்கள் பக்தி வழியில் இறைவனை சரணாகதி அடையுங்கள். அவருக்கு நன்றியோடும் உண்மையோடும் வாழ்ந்து வாழ்க்கையைச்  செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து: பக்தி மனம்






Comments

Post a Comment

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்