எளிய முறையில் பரிகாரங்கள்



"விக்னங்கள், துன்பங்கள், கவலைகள் மறைய கணபதி வழிபாடு"


                     அரச மரத்தடி (அ) வன்னி மரத்தடி பிள்ளையாரை வெள்ளிக்கிழமை காலை 6 - 7 மணிக்கு சுக்கிர ஹோரையில் அருகம்புல் சாற்றி நெய் தீபமேற்றி 21 முறை வலம் வந்து வழிபாடு செய்துவிட்டு அவர் இருக்கும் திசை நோக்கி அமர்ந்து கையில் துளசி மாலை (அ) முத்து மாலையைக் கொண்டு 
" ஓம் வக்ரதுண்டாய ஹம் "
என்னும் மகா மந்திரத்தை 108 தடவையும்

 "ஓம் கம் கணேசாய நமஹ"
என்று 27  தடவையும் சொல்லிவிட்டு உங்களின் நியாயமான விருப்பங்களை அவரிடம் தெரிவித்து விட்டு வாருங்கள். தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகள் இதை செய்து 21 ஆவது வார முடிவில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து சுண்டல் நிவேதனம் செய்து விட்டு வர உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதைக் காணலாம். அந்த துளசி (அ) முத்து மாலையை கழுத்தில் அணிந்துக் கொண்டால் நலம். பொறுமை பிரார்த்தனைக்கு மிகவும் அவசியம்.
       
                 பரிகாரம் செய்யும் போது உடலும் மனமும் பரிசுத்தமாக இருத்தல் நலம்.
           
  அசைவம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. சங்கடஹர சதுர்த்தி அன்று விரதமிருந்து வழிபட்டு விநாயகர் அகவல் பாராயணம் செய்து வர பாக்கியமெல்லாம் கிட்டும்.

அடுத்த பரிகாரத்திற்கு செல்லும் முன்

சிந்தனைக்கு சில துளிகள்:


    உன் இல்லம் என்கிற வீடு சத்தியத்தின் மேல் கட்டப்பட்டு  தர்மம் அறநெறிகளால் சூழப்பட்டிருப்பின் சுனாமியாலும் பூகம்பத்தாலும்  கூட அழிக்க இயலாது என்பதை நினைவில் கொள்.



அடுத்து: ஒழுக்கத்தினால் வரும் உயர்வு




Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்