பக்தி நெறி
பக்தி நெறி பக்தியில் பல வகைகள் உண்டு எண்ணிலடங்கா. பக்தி என்பது நாம் செலுத்துவது. அதில் "சரணாகதி"த்துவம் உயரியதாகக் கருதப்படுகிறது. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இறைவனின் தாளினை பற்றிட வேண்டும் என்ற அன்பு மட்டும் கொண்டு நீயே "கதி" என முழுவதுமாக சரண் அடைதல் மிக உயரிய பக்தி. எவ்வளவு தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் பலப்பல பட்டங்கள் பெற்றாலும் புகழ், மேன்மை என அனைத்தும் இருந்தாலும் நாம் இறைவனிடம் "பக்தி" செலுத்தவில்லை என்றால் "நன்றி" செலுத்தவில்லை என்றால் இந்த மானுடப்பிறவி இந்த பிறவியில் வீண் என உணர வேண்டும். தெய்வப் புலவர் - திருவள்ளுவர் "திருக்குறளில் கடவுள் வாழ்த்து" பகுதியில் இதனை தெளிவு படக் கூறியுள்ளார். " பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்" இவரே தெய்வப் புலவர் அல்லவா! " கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்."