தானம் -- தர்மம்
தானம்: தானம் என்பது மற்றவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பது. உதாரணம் : கர்ணன் : தன்னிடம் வருவோர்க்கு இல்லை என்று கூறாமல் தானம் செய்து சரித்திரத்தில் கொடை வள்ளல் என நீங்கா பெயர் பெற்று தானத்திற்கு கர்ணனே சான்று என்று வாழ்ந்து காட்டியவர். தர்மம் [ அறம் ]: உதாரணம்: யுதிஷ்டிரன் [ தர்ம மகாராஜா ] பாண்டவர்களில் மூத்தவர். அறத்தின் வழி வாழ்ந்து காட்டியவர். தர்மம் -- வடமொழிச் சொல் அறம் -- தமிழ்ச் சொல். வாழ்க்கையில் தர்மத்தை கடைபிடித்து இறுதி வரை அறநெறி தவறாமல் வாழ்ந்தவர். யுதிஷ்டிரர்- சூதாட்டத்தில் தோல்வி பெற்று [ வஞ்சகத்தால் ] அஸ்தினாபுரத்தை விட்டு துரியோதனன் காண்டவ வனம் என்னும் வறண்ட பூமிக்கு போக உத்தரவிட்டதும் மௌனமாக ஏற்றுக்கொண்டார். பாண்டவர்கள் நால்வரும் சாபம், சபதம் செய்த போதும் ஒரு வார்த்தையும் [ கடுஞ்சொல் கூட ] பேசாதவர். கிருஷ்ணர் தூதுவராக போக முற்படும் போதும் போர் வேண்டாம் ஐந்து கிரா