Posts

Showing posts from January, 2018

சுலோகங்கள்

Image
குறிப்பு:       சுலோகங்கள் எப்போது வேண்டுமானாலும் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கால நேரங்கள் கிடையாது. மனதினுள் ராம ராம (அ) நமசிவாய என்று அவரவர் இஷ்ட தெய்வங்களின் நாமங்களை சொல்லாம். இறைவனின் திருநாமங்கள் (விசேஷமானவை) : பிள்ளையார்         ஓம் கம் கணேஷாய நமஹ         ஓம் கம் கணபதயே நமஹ         ஓம் ஶ்ரீ மகாகணபதி த்யாஹாமி-         ஓம் ஶ்ரீ மகாகணபதி ஆஹாயாமி         ஓம் வக்ரதுண்டாய ஹம்         ஓம் கணநாதா முருகர்           ஓம் சரவண பவ:          ஓம் முருகா          ஓம் சௌம் சரவண பவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ:         சிவ பெருமான்               ஓம் நமசிவாய           ஓம் சிவாய நம           ஓம் ஹங் நம சிவ ஓம்           ஹரி ஓம் இம் ஏ சிவய நம ஸ்வாஹா           ஓம் சிவ சிவ ராம் ராம் ஓம்         விஷ்ணுவின் திரு நாமங்கள்           ஶ்ரீ மத்ஸ்ய           கூர்ம           வாமன           வராக           ந்ருஸிம்ஹ           இராம           க்ருஷ்ண           பலராம           பரசுராம           கல்கியம் பெருமானே.         ஶ்ரீராமர்    

ஶ்ரீ சீதா சமேத இராம பாத சேவகன் - தொடர்ச்சி

Image
அனுமன் - அழகு வீரம், பலசாலி, தைரியம் - சஞ்சீவி மலையை கையாலே தூக்கி பறந்து வந்தவர். அறிவாளி - சீதையை இலங்கையில் கண்டவுடன் ஶ்ரீராமர் கொடுத்தக் கணையாழியைக் காண்பித்து நம்பிக்கை கொடுத்தவர்.      ஶ்ரீராமரிடம் - இலங்கையில் இருந்து திரும்பியவுடன் சொன்ன முதல் வார்த்தை " கண்டேன் அன்னையை " என்று சொல்லி இராமருக்கு சீதை பற்றி இருந்த கவலையை விலக்க, இராமன் அனுமனை " சொல்லின் செல்வன் " என்று பாராட்டினார்.             இது அவர் புத்தி கூர்மைக்கு ஒரு சிறு சான்று மட்டுமே.        அனுமனிடம் பிரார்த்தனை செய்யும் போது கோரிக்கை இன்றி செய்யக் கூடாது. ஶ்ரீராம நாமம் கூறி இராமரின் துதி பாடிவிட்டு அனுமானை வழிபட, அனுமன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, வேண்டும் பக்தர்கள் வேண்டுவன யாவும் அருளிடுவார்.     தூய்மையான பக்திக்கு மட்டுமே அனுமன் கட்டுபடுவார்.    அனுமனை வேண்டுபவர்களுக்கு சனீஷ்வரபகவான் தீங்குகள் செய்ய மாட்டேன் என உறுதிக் கொடுத்தாராம்.    ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச் சனி, அர்தாஷ்டம சனி நடப்பவர்கள் அனுமனை வேண்டி வந்தால் எந்த வித கலக்கமும் அடைய தேவை இல்லை. அனுமனை வே

ஶ்ரீ சீதா சமேத இராம பாத சேவகன்

Image
            சீதை தன் நெற்றி வகிட்டில் குங்குமம் வைப்பது பார்த்து இது எதற்கு என அனுமன் கேட்க ஶ்ரீராமர் நலமுடன் இருப்பதற்காக நான் அனுதினமும் வைக்கிறேன் என்று சீதை சொல்ல அனுமன் கவலையுடன் செல்வதைப் பார்த்து இராமர் சீதையிடம் நீ இப்படிச் சொன்னதைக் கேட்டு அவன் வேறு ஏதேனும் செய்வான் பார், என்னிடம் பக்தி உன்னை விட அவனுக்கு தான் அதிகம் என நிரூபிக்க துடிக்கிறான், என்று கூறி முடிப்பதற்குள் அனுமன் தன் தேகம் முழுக்க செந்தூரம் பூசி எதிரில் வந்தாராம். என்னப்பா இது என்று கேட்க, அன்னை உங்கள் நலனுக்காக நெற்றியில் சிறிது செந்தூரம் வைத்திருக்கிறார்கள். நான் என் உடல் முழுக்க பூசி வந்துவிட்டேன் உங்கள் நலனுக்காக என்றதும் ஶ்ரீராமர் புளங்காகிதம் அடைந்து அனுமனை தாவி அணைத்துக் கொண்டாராம்.         சீதை மனமகிழ்ந்து நான் அனுமனுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லையே எது கொடுத்தாலும் ஈடாகாது என்று எண்ணிக் கொண்டாராம். தன் கையில் உள்ள கற்கடம் என்ற அணிகலனை அவர் கையில் போட்டுவிட்டு இது உனக்கு கவசமாக செயல்படும் என்று வாழ்த்தினாராம்.           அனுமனின் இதயத்தில் ஶ்ரீராமரும் சீதையும் மட்டுமே குடிக்கொண்டனர். இவரை வ

அனுமன் படலம்

Image
சுந்தர காண்டம் பற்றி சிறு துளிகள் :           வால்மீகி மகரிஷி இராமாயணம் என்னும் மகா காவியத்தை உருவாக்கி கொண்டிருக்கும் போது அனுமன் படலம் வந்தது . அவர் அனுமனை பற்றியே தனியாக ஒரு காண்டம்  எழுத வேண்டும். அவரின் பெருமைக்கு சான்று சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் அனுமனை எண்ணி புளங்காகிதம் அடைந்தார். இந்த இராம காவியத்தில் அவருக்காகவே ஒரு பாகம் வடிவமைக்கப்பட வேண்டும் என மனதில் எண்ணி கொண்டாராம். என்ன பெயர் சூட்டலாம் என யோசனையில் இருந்த போது அனுமனது தாய் அஞ்சனையைக் காண நேரிட்டது. இவர் போனதும் அஞ்சனை சுந்தரர் வரவில்லையா என்றிருக்கிறார். வால்மீகி மகரிஷிக்கு அனுமனுக்கு சுந்தரர் எனப் பெயர் இருப்பது தெரிய வந்து சுந்தரர் என தலைப்பிட்டு காவியம் எழுத தொடங்கிவிட்டாராம். வால்மீகி அனுமாரிடம் இந்த காப்பியத்திற்கு உனது பெயரை சூட்டியிருக்கிறேன் என்று கூற அனுமன் ஆச்சரியத்துடன் வெட்கப்பட்டு கொண்டாராம். வால்மீகி சுந்தர காண்டம் என்று சொன்னவுடன் நம்மை நம் அன்னை அப்படித் தானே அழைப்பாள் என்று எண்ணி வால்மீகி மகரிஷியை பார்க்க அவரும் ஆமோதிப்பது போல் புன்னகைப்பதாக இச் சிறு சம்பவம் எடுத்துரைக்கிறது. அனுமனும் தனக்களி

சிந்தனைக்கு

Image
சிந்தனைக்கு         இறைவன் படைப்பினில் இந்த உலகத்தில் மனித உயிர் மிகவும் மேன்மை வாய்ந்த உயர்ந்த பிறவியாக போற்றப்படுகிறது. நாம் யாரும் நூறு வருடங்கள் வாழப்போவதில்லை. வாழ்க்கை என்ன என்று முழுமையாக உணர்வதற்கே 15-(அ) 20-(அ) 25 வருடங்கள் கழிந்து விடுகிறது, பிறகு ?? இவ்வளவுதான் வாழ்க்கை.... நமக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்று நம்மிடை இல்லை. நாளை நாமும் இருக்கப் போவது இல்லை. இது தானே நிஜம் சற்று சிந்தியுங்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையில் ஏன் நாம் நல் நெறியில் வாழ முடியாதா?  சிந்தியுங்கள் : அடுத்து: அனுமன் படலம்

தேகம் கவசம் கொண்டு காக்க

Image
மோட்டார் சைக்கிளில் செல்லும் போது விபத்து ஏற்படாதிருக்க:      வீட்டை விட்டு கிளம்பும் முன் தன் மனைவி (அ) தாயின் கையால் ஒரு குவளையில் தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு செல்லவும். வீட்டில் உள்ளவர்கள் மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லி அனுப்பவும். வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன் மனதினுள் " வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எனைக் காக்கும் சுப்பிரமணிய வேல் " என்று 6 முறை சொல்லி கொண்டே வண்டியை வெளியே தள்ளி பயணிக்க வேண்டும். போகும் போது வீட்டை திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும், விபத்து ஏற்படாது. குடும்பத்துடன் வெளியே செல்லும் போது (அ) தனியாக செல்லும் போது சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் வனமாலி கதி ஸார்ங்கீ சங்கீ சக்ரீ ஸனந்தகீ ஶ்ரீமன் நாராயணோ விஷ்ணோ வாசுதேவ அபிரக்ஷது " என்று 3 தடவை சொல்லி விட்டு "  ஓம் கேசவாய நம "   என்று 3 தடவை சொல்லி விட்டு கிளம்பவும். எமபயம் நீங்க "ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ"  என்ற மந்திரத்தை தினமும் முடிந்த அளவு சொல்லி உரு ஏற்றி வர காலன் உம்மை எளிதில் அனுக முடியாது.