Posts

Showing posts from 2017

அனுபவத்தில் பலரும் பலன் கண்ட மந்திரங்கள்

Image
வாழ்க்கையில் சரிவு வராமலிருக்க ஸ்லோகம் ஓம் தத் ஸவித்தும் வரம் ரூபம் ஜோதிஹ் பரஸ்ஸ தீஹ யத்யஹ் ஸத்யேன தீபயோத்.      தினமும் 27 தடவை மனதில் சொல்லிக் கொண்டு வந்தாலே போதும். குழந்தைகள் முரட்டுத் தனம், பிடிவாத குணம் மாற கணபதி - வழிபாடு 21 எண்ணிக்கை - ஏலக்காய் கோர்த்த மாலை 18 வாரம் - வியாழன் தோறும் குழந்தை பேருக்கு அர்ச்சனை 9 முறை - ஆலயத்தை சுற்றி வலம் வருதல் 18 ஆவது வார முடிவில் - அர்ச்சனை, சுண்டல் நிவேதனம். படிப்படியாக பிள்ளைகளிடம் மாற்றம் தெரிவதைக் கண்கூடாகக் காணலாம்.               விருப்பங்கள் நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு 9 வாரம் - சனிக்கிழமை வெற்றிலை மாலை 45 (அ) 108 எண்ணிக்கையில் - வெற்றிலை மாலை  9 வார முடிவில் - வடை மாலை, செந்தூரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு. ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள் தொடர்ந்து படித்து வரவும். தோஷங்கள் அகல காக்கைக்கு - எள் கலந்த உணவு - தினசரி பசுமாட்டுக்கு - அகத்திக்கீரை - அமாவாசை தோறும் பைரவரின் வாகனமான நாய்க்கு - நெய் சேர்த்த கோதுமை சப்பாத்தி - தினசரி ஒன்பது ஒரு ரூபாய் நாணயம்

ஞானம் பெற

Image
            சரஸ்வதி தேவி வழிபாடு              நல்ல கல்வி அறிவு பெற ஞானம் பெற (குழந்தைகட்கு)             முதலில் விநாயகரை ஞானம் பெற வழிபாடு அடுத்ததாக கலைவாணி சரஸ்வதி தேவி வழிபாடு. ஹயக்ரீவரையும் வழிபட வேண்டும்.           குழந்தைகளுக்கு இரண்டரை வயது முடிந்தவுடன் பூஜை அறையில் வளர்பிறை சுபநாளில் புதன்கிழமை காலை 6-7 மணி அளவில் புத ஹோரையில் ஒரு தாம்பாளத்தில் அரிசி (அ) நெல் பரப்பி அதில் சிறிது பூக்களும் மஞ்சளும் இட்டு சரஸ்வதி தேவியை பிரதானமாக வைத்து அவர் எதிரில் தாம்பாளத்தை வைத்து இரு பக்கமும் குத்து விளக்கேற்றி பழம், பூ, வெற்றிலை பாக்கும் அதனுடன் வெண்பொங்கலும் படையலிட்டு தூப தீபங்காட்டி தேங்காய் உடைத்து இரு பக்கமும் வைத்து விடவும்.               பின் எதிரில் மனை போட்டு அமர்ந்து தாய் தன் மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு அந்த நெல் மணியில் ' ஓம் ' என்ற எழுத்தை குழந்தையின் கையை பிடித்துக் கொண்டு விரல்களினால் எழுதச் செய்ய வேண்டும். அதற்கு அடியில் அகாரத்தின் முதல் எழுத்தான ' அ ' என்ற எழுத்தையும் குழந்தையின் கையால் எழுத செய்ய வேண்டும்.                 பி

ஒழுக்கத்தினால் வரும் உயர்வு

Image
                                       ஒழுக்கத்தினால் வரும் உயர்வு: ஒழுக்கமே          - சத்தியம் சத்தியமே           - தர்மம் தர்மமே                - அறம் அறமே                 - நேர்மை நேர்மையே        - எண்ணங்கள் எண்ணங்களே - மனம் மனமே                 - மனசாட்சி மனசாட்சியே     - கடவுள் கடவுளைக்கான - வரம் வரம் கிடைக்க    - தவம் தவத்தினால்       - உயர்வு ஒழுக்கத்தினால் வரும் உயர்வு என்றும் நிலைத்திருக்கும் இது நான்கு மறை தீர்ப்பு. அடுத்து: ஞானம் பெற

எளிய முறையில் பரிகாரங்கள்

Image
"விக்னங்கள், துன்பங்கள், கவலைகள் மறைய கணபதி வழிபாடு"                       அரச மரத்தடி (அ) வன்னி மரத்தடி பிள்ளையாரை வெள்ளிக்கிழமை காலை 6 - 7 மணிக்கு சுக்கிர ஹோரையில் அருகம்புல் சாற்றி நெய் தீபமேற்றி 21 முறை வலம் வந்து வழிபாடு செய்துவிட்டு அவர் இருக்கும் திசை நோக்கி அமர்ந்து கையில் துளசி மாலை (அ) முத்து மாலையைக் கொண்டு  " ஓம் வக்ரதுண்டாய ஹம் " என்னும் மகா மந்திரத்தை 108 தடவையும்  " ஓம் கம் கணேசாய நமஹ " என்று 27  தடவையும் சொல்லிவிட்டு உங்களின் நியாயமான விருப்பங்களை அவரிடம் தெரிவித்து விட்டு வாருங்கள். தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகள் இதை செய்து 21 ஆவது வார முடிவில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து சுண்டல் நிவேதனம் செய்து விட்டு வர உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதைக் காணலாம். அந்த துளசி (அ) முத்து மாலையை கழுத்தில் அணிந்துக் கொண்டால் நலம். பொறுமை பிரார்த்தனைக்கு மிகவும் அவசியம்.                          பரிகாரம் செய்யும் போது உடலும் மனமும் பரிசுத்தமாக இருத்தல் நலம்.               அசைவம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 2. சங்கடஹர சதுர்த்தி

பக்தி மனம் தொடர்ச்சி...

Image
                 வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டு சக மனிதர்களிடமும் அன்பு பாராட்டி நம்மை போல் தான் மற்றவர்களும் என்ற எண்ணம் கொண்டு நம் இல்லற தர்மங்களைப் பின்பற்றி கடமைகளை மன நிறைவுடன் செய்ய வேண்டும்.                   வாருங்கள் வாழ்வியலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நமக்கு பூதாகாரமாகத் தோன்றினாலும் அவற்றை இறை அருளால் எளிய பரிகாரங்கள் மூலம் குறைத்துக் கொள்ளலாம். அன்புடன் நம்பிக்கையும், பொறுமையுமே பிரதானமாக கொள்ள வேண்டும். பரிகாரம் என்பது மழைக்கு             -   குடையாக  வெயிலுக்கு       -   இதமான காலணியாக வியாதிகளுக்கு-  அரு மருந்தாக பலவீனமான மனத்திற்கு         -   நம்பிக்கையூட்ட வாழ்க்கையை தொலைத்தவர்கள்- பரிணமிக்க, பிரகாசிக்க    வாருங்கள் இனி காண்போம். அடுத்து: எளிய முறையில் பரிகாரங்கள்

பக்தி மனம்

Image
' நீ இறைவன் புகழைப் பாடு   உனது புகழை உலகம் பேசும்'                  கடமைகளை நாம் தினசரி செய்யும்போது இறைவனுக்கு சமர்ப்பித்தால் அது தெய்வீகமாகிறது.   "தனக்கும் கீழே மாந்தர் ஒரு கோடி" இதை நிதம் எண்ணிப் பார்த்து நிம்மதி தேடு. "பிறப்பு - தாய் தந்தை கொடுத்தது வளர்ப்பு - கடவுள் கையில் வாழ்க்கை - விதியின் கையில்"                     அடியார்களுக்கு கர்மா வழியே துன்பங்கள் சூழும் போது இறைவன் நம்மை கீழே விழ்ந்திடாது தாங்கிக் கொள்வான்.                    நமது பக்தியானது எப்படி இருக்க வேண்டும் என்றால் தாயைக் காணாமல் அழுது துடிக்கும் குழந்தையிடம் வேடிக்கைகாட்ட தடுத்து நிறுத்த வித விதமான விளையாட்டு  பொம்மைகள், தின்பண்டங்கள் என எல்லாம் தந்து ஏமாற்றச் செய்வார்கள். பலவிதமான முயற்சிகள் செய்து தூங்க வைக்கவும் முயல்வார்கள்.  பல குழந்தைகள் இதில் மயங்கி போய் தாயை மறந்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள். ஒரு சில குழந்தைகள் மட்டும் யாவற்றையும் புறம் தள்ளிவிட்டு தாயைத் தேடி தஞ்சம் அடைவார்கள். நிம்மதியும் பெறுவார்கள் .                           நம் பக்தியும் க

முகவுரை

Image
              உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் குடும்பங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் இந்த பணியைத் தொடங்குகின்றேன். இதை தொடங்குவதற்கு முன் எனது தாய் திருமதி கமலாம்மாள், தந்தை திரு எ கே நடராஜன் அவர்களின் பாத கமலங்களில் சமர்ப்பிக்கின்றேன்.              என்னை பற்றி சிறு முகவுரை:               நான் சாந்தா வெங்கடேசன் , எனது தந்தை சிறு வயதில் என்னுள் பக்தி என்னும் விதையை துளிர்த்தவர். இறைவன் உன்னை கவனித்து கொண்டே இருப்பார் என்ற எண்ணத்தை என்னுள் திணித்துவிட்டவர். உலகில் அதிகளவில் நான் நேசித்த முதல் நபர் இன்று வரை என் தந்தை மட்டுமே. என் பத்து வயதில் இந்த உலகை விட்டு அவர் மறைந்தாலும் அவர் என்னுள் சிறு துளியாக விதைத்த ஆன்மிகம் என்னும் விதை இன்று முழுமை பெற்ற மரமாக வேரூன்றி என்னுள் உள்ளத்தில் பரந்து விரிந்து பரிணமிக்கின்றது. எனது வாழ்க்கை பயணத்தில் சங்கடங்கள் சூழ்ந்தாலும் என்னுள் இருக்கும் இறைஅருள் பசும்புல்வெளியாக மாற்றி காட்டியது. சோதனைகள் வரும்போது எள்ளளவும் தடம்மாறாமல் பயணிப்போம் என்றால் அதுவே பின்னாளில் சாதனையாக மாறி உங்களை வாழ்வில் உச்சாணிக்