மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்

மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்: [மான் - பாலை வனம்] பாலைவனத்து மணலில் ஓடும் மான் கானல் நீரை நீரென எண்ணி ஓடும். மாந்தர்களும் பூவுலக வாழ்க்கையை நிஜம் என்று நம்பி மூழ்கி புலன்களில் தோற்றுப் போய் வீழ்கிறார்கள் . மனதை மேல்நிலைக்கு இறைவனை அடைய கொண்டு சென்றவர்கள் இந்த " பூவுலக " வாழ்க்கையில் மயங்குவதில்லை. மெய்ப் பொருளை மட்டுமே நம்புவார்கள். கானல் நீரை நிஜம் என்று நம்பும் மான் ஓடிக் கொண்டே தான் இருக்கும். கானல் நீரும் தள்ளித் தள்ளி போய்க் கொண்டே இருக்கும். முடிவில் நீர்க் கிடைக்காத மான் தளர்ந்துவிடும். மனிதர்கள் வாழ்க்கையும் கானல் நீரை நம்பி ஓடும் மான் போல தான். மெய்ப்பொருள் என்ன என்று அறியாமலேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. அடுத்து:: மனிதர்கள் - மனம்