Posts

மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்

Image
மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்: [மான் - பாலை வனம்]           பாலைவனத்து  மணலில் ஓடும் மான் கானல் நீரை நீரென எண்ணி ஓடும்.              மாந்தர்களும் பூவுலக வாழ்க்கையை நிஜம் என்று நம்பி மூழ்கி புலன்களில் தோற்றுப்  போய் வீழ்கிறார்கள் .                    மனதை மேல்நிலைக்கு இறைவனை அடைய கொண்டு சென்றவர்கள் இந்த " பூவுலக " வாழ்க்கையில் மயங்குவதில்லை. மெய்ப் பொருளை மட்டுமே நம்புவார்கள்.        கானல் நீரை நிஜம் என்று நம்பும் மான் ஓடிக் கொண்டே தான் இருக்கும். கானல் நீரும் தள்ளித் தள்ளி போய்க்  கொண்டே இருக்கும்.         முடிவில் நீர்க் கிடைக்காத மான் தளர்ந்துவிடும். மனிதர்கள்  வாழ்க்கையும் கானல் நீரை நம்பி ஓடும் மான் போல தான்.          மெய்ப்பொருள் என்ன என்று அறியாமலேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது.    அடுத்து:: மனிதர்கள் - மனம்  

சிந்தனைக்கு

Image
சிந்தனைக்கு :      நம்மை கடந்து போகும் ஒவ்வொரு மனிதர்களிடமும் நாம் கற்றுக் கொள்ள ஒரு செய்தி இருக்கிறது. அதை உணர்வதிலும் தெளிவதிலும் தான் வாழ்க்கை இருக்கிறது. ஒருவரை போல் இன்னொருவர் இருக்க முடியாது. உதாரணம் :                         பாண்டவர்கள் ஐவரில் எல்லோரும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள். கௌரவர்களும் ஒவ்வொரு விதமான நாயகர்கள்.     இதில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பார்க்கக் கூடாது, ஒவ்வொருவரும் நற்குணங்களில் மாறுபட்டு மிகுதியாகவோ, குறைவாகவோ நற்பண்புகளைப்  பெற்றவர்களே.    அடுத்து:: ஆத்திகம் நாத்திகம் 

மனிதர்கள் - மனம்:

Image
மனிதர்கள் -  மனம்:                  மனிதர்கள் நாம் நமக்குள்ளும் நிறைய முகங்கள், நிறைய குணங்கள் உண்டு. உள்ளம் ஒன்று, எண்ணங்கள் வேறுவேறு நாம் சிலருக்கு நல்லவர்களாகத்  தெரிவோம். பலருக்கு வேண்டப்படாதவர்களாக இருப்போம். இது இயல்பு.               நமது மனமானது மலரிலுள்ள தேனை மட்டும் உறிஞ்சும் தேனீக்களைப் போல் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஈக்களைப்   போல் வாழ ஆசை படக்கூடாது ஈக்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கும். அறுசுவை உணவின் மீதும் அமரும், தூய்மை அற்ற இடங்களிலும் வேறுபாடு இல்லாமல் இருக்கும்.                 மஹான்கள், ஞானிகள் தேனீக்களை போன்றவர்கள். மனிதர்கள் ஈக்களைப் போல இருந்தாலும் அதிலிருந்து வெளியில் வர பழக வேண்டும். தன்மை-- இயல்பு               சில நேரங்களில் நம்மிடை உயரிய பண்புகள்  தோன்றும் பல நேரங்களில் சிறுமை, கோபம், பொறாமை, புறம் கூறுதல் போன்ற குணங்களும் காணப்படும். உயரிய பண்புகளான அஹ...

சந்ததி வளர , விருத்தி அடைய:

Image
சந்ததி  வளர  , விருத்தி  அடைய: செய்யவேண்டியது:            ஒரு  வெள்ளிக்கிழமை யில்  [108] நூற்றியெட்டு  சிவப்பு  செம்பருத்தி  பூக்களை   மாலையாகக்  கட்டி  மங்களாம்பாளுக்கு சாற்றி  ஒரு  தடவை  அர்ச்சித்தால்  போதும்.                               சந்தான  பாக்கியம்  வாழையடி  வாழையாக  தொடரும்.              இது  உண்மையிலும்  உண்மை.  செய்து  பயனடையுங்கள்.                                       மன நிறைவு  அடையுங்கள்.   அடுத்து:: சிந்தனைக்கு 

சித்திரை மாதம் ஞாயிறு அன்று குழந்தை பிறந்தால் :

Image
மீண்டும் ஓர் பரிகாரம்: சித்திரை   மாதம்  ஞாயிறு  அன்று குழந்தை  பிறந்தால் : செய்யவேண்டியது : குழந்தை க்கு: ஞாயிறு  அன்று  -   எண்ணெய்  ஸ்நானம்                                                            கூடாது.                                             முடி  வெட்டக்கூடாது.                                               நகமும் வெட்டக்கூடாது. குறிப்பாக :  ஞாயிறன்று  தாயும்  சேயும்  அசைவம்  சாப்பிடக் கூடாது. வழிபாடு :                           ...

தானம் -- தர்மம்

Image
தானம்:         தானம்  என்பது  மற்றவர்களுக்கு  அள்ளி   அள்ளி   கொடுப்பது. உதாரணம் : கர்ணன் :                 தன்னிடம்  வருவோர்க்கு  இல்லை  என்று  கூறாமல்  தானம்  செய்து  சரித்திரத்தில்  கொடை  வள்ளல்  என  நீங்கா  பெயர் பெற்று  தானத்திற்கு  கர்ணனே    சான்று  என்று  வாழ்ந்து  காட்டியவர். தர்மம் [ அறம் ]: உதாரணம்: யுதிஷ்டிரன் [ தர்ம  மகாராஜா ]  பாண்டவர்களில்  மூத்தவர்.            அறத்தின்  வழி  வாழ்ந்து  காட்டியவர்.               தர்மம்  --  வடமொழிச்  சொல்             அறம்    --   தமிழ்ச்  சொல்.            வாழ்க்கையில்  தர்மத்தை  கடைபிடித்து  இறுதி  வர...

தொடர் வியாதி -- பரிகாரங்கள்

Image
தொடர்  வியாதியால்  துன்பப்  படுபவர்களுக்கு  எளிய  பரிகாரங்கள்:                 உங்கள்   மனம்  அமைதியாக  இருக்க  முயற்சி  செய்யுங்கள்.             உங்களுக்கு  வியாதி  இருக்கிறது  என்பதை  மறந்து விடுங்கள்.            கண்ணாடியில்  உங்கள்  உருவத்தைப்  பார்த்து  நான்  உன்னை  மிகவும்  நேசிக்கிறேன்.  இந்த  சரீரத்தில்  இருக்கும்  உயிரான  நீ  எப்போதும்  என்னில்  மகிழ்ச்சியாக  இருக்க  வேண்டும்.  என்  உடலானது  என்னுள்  இருக்கும்  இந்த  உயிரைப்  போற்றி  பாதுகாக்கும்  என்று  சொல்லுங்கள்.              உங்களுக்கு  எது கிடைக்கவில்லையோ  அவற்றை  எண்ணி  வருந்தாமல்  அந்த  எண்ணத்தை  தொலைத்துவிடுங்கள் ...