Posts

இல்லம் செழிப்படைய:

Image
இல்லம் செழிப்படைய:                     வளம் கொழிக்க:              பஞ்சமி திதி அன்று குளிகை காலத்தில் வீட்டின் பூஜை அறையில் ஐந்து அகல் விளக்குகள் வாங்கி மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்து தாமரைத் தண்டினால் செய்த திரி போட்டு பசு நெய் ஊற்றி அரிசி மாவினால் கோலம் போட்டு ஐந்து விளக்குகளையும் வரிசையாக ஏற்ற வேண்டும்.            பழம்,பூ, வெற்றிலை பாக்கு, ஏலக்காய் கலந்த பால் நிவேதனம் செய்ய வேண்டும். தூப தீபங்கள் காட்டி தேங்காய் உடைத்த பின் " ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியே நமஹ" என்று சொல்லிக் கொண்டே அந்த தீபங்களை ஐந்து முறை வலம்  வரவும்.                                பின் மனையில் உட்கார்ந்து அந்த தீபங்களை பார்த்து உங்கள் தேவைகளை நியாயமான விருப்பங்களை மனநிறைவோடு சொல்லவும். எதிரில் தேவி இருப்பது போல் எண்ணிக் கொண்டு பக்தியுடன் கேளுங்கள். கேட்ட வரம் கிடைக்கும். தொடர்ந்து ஒவ்வொரு பஞ்சமி திதி அன்றும் செய்து வாருங்கள். கை  மேல் பலன் உண்டு.                           குறிப்பு :  இல்லத்தில் பஞ்சமில்லா நிலை உருவாகும். மனையில் அமர்ந்து  " ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியே நமஹ&qu

பக்தி நெறி

Image
பக்தி நெறி              பக்தியில் பல வகைகள் உண்டு எண்ணிலடங்கா. பக்தி என்பது நாம் செலுத்துவது. அதில் "சரணாகதி"த்துவம் உயரியதாகக் கருதப்படுகிறது.             எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இறைவனின் தாளினை பற்றிட வேண்டும் என்ற அன்பு மட்டும் கொண்டு நீயே "கதி" என முழுவதுமாக சரண் அடைதல் மிக உயரிய பக்தி.            எவ்வளவு தான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் பலப்பல பட்டங்கள் பெற்றாலும் புகழ், மேன்மை என அனைத்தும் இருந்தாலும் நாம் இறைவனிடம் "பக்தி" செலுத்தவில்லை என்றால் "நன்றி" செலுத்தவில்லை என்றால் இந்த மானுடப்பிறவி இந்த பிறவியில் வீண் என உணர வேண்டும்.        தெய்வப் புலவர் - திருவள்ளுவர்    "திருக்குறளில் கடவுள் வாழ்த்து" பகுதியில் இதனை தெளிவு படக் கூறியுள்ளார். " பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்     இறைவன்  அடிசேரா தார்" இவரே தெய்வப் புலவர் அல்லவா!  " கற்றதனால் ஆய  பயனென்கொல்  வாலறிவன்    நற்றாள் தொழாஅர்  எனின்."  

சனீஸ்வரர்:

Image
சனீஸ்வரர்:           நவகோள்களில் ஈஸ்வரர் பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.          நவகிரகங்களில் சனிபகவான் "நீதி" தவறாதவர். அவரவர் "கர்ம" வினைகளுக்கு உரிய பலனைத் தவறாமல் வழங்குபவர். நம்மில் பலருக்கும் "சனி" எனும் பெயரைக் கேட்டதுமே பயம் தொற்றிக் கொள்ளும். அது தேவையே இல்லை. "ஆயுள் காரகன்" எனப்படும் சனிபகவான் கருணை வள்ளல்.           முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத்  தந்து நம் பாவச்  சுமைகளை  களைக்கும் கிரகநாதன் இவர்.             ஒன்பது கிரகங்களில் "சந்திரன்" மிக வேகமாகச் சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் இரண்டே கால் நாட்கள் தான் இருப்பார் . ஆனால்  சனீஸ்வரர் மெதுவாகச் சுற்றுவார். ஒரு கட்டத்தை [ இராசியை] கடக்க இரண்டரை வருடம் எடுத்துக் கொள்வார். "மந்தன்" எனப் பெயரும் உண்டு.             சனீஸ்வரருக்கு ஒரு கால் பலவீனமானது. எப்படி எதனால் என்றால்               இராவணன் தன மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெறவேண்டும் என்பதற்காக தன தவத்தின் வலிமையால் நவகிரகங்களான

திரிதியை

Image
திரிதியை :           வருடம் தோறும் வரும் " அக்ஷய திரிதியை " அன்று புனித நாளாக கருதி வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும். அன்று நம்மால் முடிந்த அளவுக்கு தானங்கள் செய்வது சிறப்பு. அன்று மனமார தானம் செய்தால் எப்போதும் யாரிடமும் தானம் பெறாத நிலையில் நாம் வாழலாம்.       பூக்கள், காசு, வெள்ளி நாணயங்கள், உடைகள், தானியங்கள், இனிப்பு வகைகள், உணவு வகைகள் என முடியும் அளவுக்கு தானங்கள் செய்யலாம். பல மடங்காக இறைவன் உங்களுக்கு அருளுவார். குறிப்பு:  எதையும் எதிர்பார்க்காமல் தானம் செய்ய வேண்டும். விசேஷம் : அன்று வீட்டில் பல்லியைக்  கண்டால் மிகவும் விசேஷமாக கருதப் படுகிறது. 

கிரிவலம்

Image
கிரிவலம்            வாழ்க்கையில் கடினமாக "உழைத்து, உழைத்து" உயர்வடைய முடியாமல் மாற்றங்கள் வராமல் இருப்பின்         " சனிக்கிழமை, மகம் நக்ஷத்திரத்துடன் கூடிய நாளில் பௌர்ணமி " வரும் போது ஒரே ஒரு முறை மட்டுமாவது கிரிவலம் வந்தால் கூட அவல  நிலை மாறி உயர் நிலை அடைவார்கள்.                                 கிரிவலம் செய்யும்போது பக்தியோடு மௌனமாக இறைவனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே சென்று வரவும்.          மாற்றங்கள் விரைவில் நடக்கும்.

சாஸ்த்திரம்: சம்பிரதாயம்:

Image
சாஸ்த்திரம்: சம்பிரதாயம்:      சாஸ்த்திரங்கள் என்றும் மாறாத தன்மையுடையவை. இந்து மத சாஸ்த்திரங்கள் எண்ணிலடங்கா. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கை நெறிகளை நேர்ப்படுத்தி  வாழ்வது கடினமாகிறது. ஓரளவுக்கு முடிந்தவரை பின்பற்றலாம். ஆனால் எப்போதும் மீறி நடக்கக்கூடாது. சம்பிரதாயங்கள்:                            இது மனிதர்களாகிய நாமே ஏற்படுத்திக் கொண்டது. மூதாதையர்கள், முன்னோர்கள் வகுத்த பாதையில் சம்பிரதாயங்களை மேற்கொண்டு வாழ்வதே. இது நமக்கு ஏற்றாற்போல், காலச் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறும். மாற்றிக்கொள்ளவும் செய்யலாம். எப்போதும் முன்னோக்கிப் போகாமல் பிற்காலத்தையும் கருத்தில்க்  கொண்டு சம்பிரதாயங்களின் அடிப்படை மட்டும் எப்போதும் மாறாமல் பின்பற்ற வேண்டும்.  

ஆத்திகம் நாத்திகம்

Image
  ஆத்திகம் -- நாத்திகம் :          ஆதிக்  காலத்தில்   மனிதன் இயற்கையையும்,  அதன்  பேராற்றலும்  கண்டு  பணிந்து  வணங்கத்  துவங்கியது  பக்தியாக  கருதப்பட்டது.  முதல் கடவுளாக சூர்ய  பகவானையே  வழிபட்டனர்.  பஞ்ச  பூத  வழிபாடு: பின்னாளில்  பரிணாமங்கள்  வளர்ந்து  வளர்ந்து  உருவங்கள்  கொடுத்து  மனமுருகி  அதற்கான  குறியீடுகளும்  கொடுத்து  வணங்கினால்  நல்  வாழ்வு  பெறலாம்  என்ற  எண்ணத்தில்  இறைவனுக்கு  ஆகிருதி  அதாவது  படையல்  பூசைகள்,  யாகவேள்விகள்,  சடங்கு,  சாஸ்திரம், சம்பிரதாயம்  என  ஒவ்வொன்றாய்  உருவாக்கப்பட்டது.  இப்படியே  ஆலயங்கள்  எழுதப்பட்டதாக  வரலாறு. மதங்கள் :        பக்தியை  விட  அதிகமாக  இறைவனைச்  சுற்றி  மனிதர்களால்  கட்டமைக்கப்பட்ட  இந்த  கோட்பாடுகளின்  ஸ்தாபனங்கள்  தீவிரமடைந்து  மதம்  என  பெயர்  பெற்றது. விளைவு: இதை  ஏற்றுக்  கொண்டவர்கள்  -  ஆத்திகர்கள்  வினாக்களை  எழுப்பியவர்கள் -  நாத்திகர்கள்    அடுத்து::மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும்